Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியேவண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வாஎரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவேவிரைந்து நீயும் இங்கே வா வா வா எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மாஎங்கள்...
HomeSongsஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா... பாடல்

ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா… பாடல்

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசா
ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா

லிங்க ரூப தரிசனம்
எங்க வாழ்வின் விமோசனம்
சிவ சிவ சிவ தாணுமாலயா
எனை காக்க நான் சொல்ல வேணுமா

லிங்க ரூப தரிசனம்
எங்க வாழ்வின் விமோசனம்
சிவ சிவ சிவ தாணுமாலயா
எனை காக்க நான் சொல்ல வேணுமா

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசா
ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா

மனதிற்கு புரியவில்லை உதடிற்கு தெரியவில்லை
கால் நிற்கவில்லை காரணம் வேறெதுவுமில்லை
நீயே நீயே என் பாலவிளை சிவனே
ஊரை சுற்றி பார்க்கவே உயரே சென்று அமர்ந்தாயோ
யாரை எட்டிபிடிக்கவென்று உயிரே சொல்லுது அறிவாயோ

லிங்க ரூப தரிசனம்
எங்க வாழ்வின் விமோசனம்
சிவ சிவ சிவ தாணுமாலயா
எனை காக்க நான் சொல்ல வேணுமா

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசா
ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா

பால் அபிஷேகம்
தேன் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்
இளநீர் அபிஷேகம்
யாருக்கு யாருக்கு பாலவிளை சிவனே உனக்கு
பிரதோஷ நாளில் சகல தோஷத்தையும் நீக்கிடுவாயே
கரம் குவித்து வணங்கிடவே கரம்பிடித்து கரை சேர்ப்பாயே

லிங்க ரூப தரிசனம்
எங்க வாழ்வின் விமோசனம்
சிவ சிவ சிவ தாணுமாலயா
எனை காக்க நான் சொல்ல வேணுமா

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசா
ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா

நந்தி உனை வணங்கிட நல்ல காலம் பிறக்கும்
நம்பி உனை வணங்கிட நடப்பவை யாவும் நல்லவையே
நீ புண்ணியம் செய்தாய் சிவன் உன் மீது ஏற
உன் புண்ணியத்தில் பாதி தருவாயா நான் சிவபதம் அடைய

லிங்க ரூப தரிசனம்
எங்க வாழ்வின் விமோசனம்
சிவ சிவ சிவ தாணுமாலயா
எனை காக்க நான் சொல்ல வேணுமா

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசா
ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here