Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியேவண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வாஎரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவேவிரைந்து நீயும் இங்கே வா வா வா எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மாஎங்கள்...
HomeSongsபள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி பாலவிளை பத்ரேஸ்வரி... பாடல்

பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி பாலவிளை பத்ரேஸ்வரி… பாடல்

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி
பாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி

உடுக்கை நாதம் உலகெங்கும் ஒலிக்க
எடுத்த சபதம் நிறைவேற்றி முடிக்க
எந்நாளும் உன் கோவிலில் நான் வாசமே

ஓம் சக்தி பாலவிளை பராசக்தி
ஓதுவோரை நெருங்காது தீயசக்தி

ஓம் சக்தி பாலவிளை பராசக்தி
ஓதுவோரை நெருங்காது தீயசக்தி

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி
பாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி

கனகாம்பரம் சூடி கவலைகளை போக்க
கணபொழுதில் வந்திடுவா
கனகவல்லி சுந்தரவல்லி ஓடையிலே போகும் போது
கூடவந்து காத்திடுவா
மீனாக நீயும் இரையாக நானும் மாறிடனும்
மீனாட்சி நீயும் அருள் தந்திடணும்

ஓம் சக்தி பாலவிளை பராசக்தி
ஓதுவோரை நெருங்காது தீயசக்தி

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி
பாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி

ஓம் ஓம் என்ற ஓங்காரத்தில் அகங்காரம்
அடியோடு மாண்டு போனதே
சப்தம் நிசப்தம் எதுவானலும்
சங்கரி நீ காண்பது உண்மை பக்தியே
வெப்பம் குளிர் எதுவானாலும் பராசக்தி
காப்பது உன் சக்தியே
நித்தம் பாடி உனை கட்டி வைப்பது எனது யுக்தியே

ஓம் சக்தி பாலவிளை பராசக்தி
ஓதுவோரை நெருங்காது தீயசக்தி

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி
பாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி

பாலவிளை பத்ரேஸ்வரி நல்ல பாதை காட்ட வேணுமே
ஏலகுழலி நீயும் இங்கே ஏற்றம் தர வேணுமே
சிம்மவாகினி முககாப்பிலே முழுமனதையும்
பறிகொடுத்து புன்னகையில் நமை மயக்கிடுவா

ஓம் சக்தி பாலவிளை பராசக்தி
ஓதுவோரை நெருங்காது தீயசக்தி

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி
பாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி

உடுக்கை நாதம் உலகெங்கும் ஒலிக்க
எடுத்த சபதம் நிறைவேற்றி முடிக்க
எந்நாளும் உன் கோவிலில் நான் வாசமே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here