தங்க மகளே பாலவிளை பூமகளே
உன் மகள் நான் பாடட்டுமா தாலாட்டு
என் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு
எங்க தாயே பாலவிளை செல்ல தாயே
உன் மகள் நான் உனக்கு பாடட்டுமா தாலாட்டு
என் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு
மெட்டுக்கள் கோடி பூத்து குலுங்குது
கீதங்கள் கோடி கேட்டு இனிக்குது
ஜெனங்கள் கோடி தோன்றி மறையுது
பறவைகள் கூட உன் புகழை பாடுது
மெட்டுக்கள் கோடி பூத்து குலுங்குது
கீதங்கள் கோடி கேட்டு இனிக்குது
ஜெனங்கள் கோடி தோன்றி மறையுது
பறவைகள் கூட உன் புகழை பாடுது
தங்க மகளே பாலவிளை பூமகளே
உன் மகள் நான் பாடட்டுமா தாலாட்டு
என் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு
அலை அலையாக மக்கள் கூட்டம்
அழகு தேவதை உனைகாண
மலை மலையாக வந்து குவியுது
பூக்கள் உனை சுவாசிக்க
தலைமேல் இருக்கும் கிரீடம் இங்கே ஜொலித்திடும் அழகை வந்து பார்
சிலையாக இல்லாமல் உயிரோடு இருக்கும் பத்ரேஸ்வரியை நீயும் வந்து பார்
தலைமேல் இருக்கும் கிரீடம் இங்கே ஜொலித்திடும் அழகை வந்து பார்
சிலையாக இல்லாமல் உயிரோடு இருக்கும் பத்ரேஸ்வரியை நீயும் வந்து பார்
தங்க மகளே பாலவிளை பூமகளே
உன் மகள் நான் பாடட்டுமா தாலாட்டு
என் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு
மெட்டுக்கள் கோடி பூத்து குலுங்குது
கீதங்கள் கோடி கேட்டு இனிக்குது
ஜெனங்கள் கோடி தோன்றி மறையுது
பறவைகள் கூட உன் புகழை பாடுது
தரணியை ஆளும் தாயும் இங்கே பாலவிளையில் தஞ்சம்
அன்னபூரணியே பசியை போக்கிட வரணும் இங்கே கொஞ்சம்
தாரணி உனை என்றும் போற்றிட ஏங்குது எந்தன் நெஞ்சம்
பத்ரேஸ்வரி உந்தன் அன்போ எனை பெற்றவளை மிஞ்சும்
தங்க மகளே பாலவிளை பூமகளே
உன் மகள் நான் பாடட்டுமா தாலாட்டு
என் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு
மெட்டுக்கள் கோடி பூத்து குலுங்குது
கீதங்கள் கோடி கேட்டு இனிக்குது
ஜெனங்கள் கோடி தோன்றி மறையுது
பறவைகள் கூட உன் புகழை பாடுது
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd