Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsவிவேகானந்தருக்கு சமர்பணப்ப....

விவேகானந்தருக்கு சமர்பணப்ப….

விஸ்வதத்தர் புவனேஸ்வரி தம்பதியர் பெற்றவா

விஸ்வாமித்திரர் போல் ஆன்மீகப்புகழ் பெற்றவா

ஆயிரத்து எண்னூற்று அறுபத்துமூன்றில் அவதரித்தவா

ஆயிரமாயிரத்தில் ஒருவர்கூட உன்போல் திலையே

குரு இராமகிருஷ்ணரின் தலைமைச்சீடரான உத்தமரே

குருவையும் மிஞ்சி உலகப்புகழ் பெற்றவரே

நரேந்திரதத்தா எனும் இயர்பெயர் கொண்டவா

நாநிலம் போற்றும் விவேகானந்தராய் உயர்ந்தவா

கல்கத்தா தனிலுதித்து பார்போற்ற வீரத்துறவியானா

கலியுகம்தனில் உலகையே தன்பால் ஈர்த்தவா

அமெரிக்கா சிகாகோவில் வீரமுழக்கம் இட்டவா

அமெரிகாதனில் இரண்டாண்டு ஆன்மீகப்பயணம் செய்தவா

இராமகிருஷ்ண மடத்தை பேலூரில் அமைத்தவா

இராமகிருஷ்னார்தன் சீடர்களின் குருவாய் ஆனவா

குமரிக்கடல் பஜனைபாட மூநாள்தியானம் செய்தவா

குமரிதொட்டு நாடுமுழுதும் ஆன்மீகப்பயணம் செய்தவா

அச்சமே நமக்குத் துயர்தருவது என்றாயே

துச்சமே என்மனித வாழ்வை எண்ணியவரே

சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாரும் என்றாயே

சோர்ந்து இருக்கவில்லைநீர் முப்பத்தொன்பது வயதுவரை

உன்னைத்தாழ்த்தி பேசும்போது ஊமையாயிரு என்றீரே

உன்னைவாழ்த்தி உலகேபேச நிரந்தர ஊமையாநீரே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here