Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeHistoryநேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை... தேச துரோகி காந்தி

நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை… தேச துரோகி காந்தி


தேச தந்தை நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை – 1947-ல் வேறு வழியாக வழங்கப்பட்டது : பசும்பொன்னார் பாராளுமன்ற உரை சுட்டுரை

“எனக்கு உங்கள் ரத்தத்தை தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறேன்” என்று முழங்கிக் கூறி இளைஞர்களின் மனங்களில் சுதந்திர வேட்கையை விதைத்த வீரர் சுபாஷ் சந்திரபோஸ்.
அவருக்கே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ‘நேதாஜி’ என்ற பட்டத்தை சூட்டினார்.

இந்தியர்களிடையே ‘ஜெய்ஹிந்த்’ என்ற வீர முழக்கத்தை முதன்முறையாக பரப்பியவரும் நேதாஜிதான். (இந்த முழக்கத்தை அவர் செண்பகராமன் பிள்ளையிடம் இருந்து பெற்றார்.)

உண்மையில் 1947-ல் நாம் பெற்றது முழுமையான சுதந்திரம் அல்ல;
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்களுக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு போன்றவர்களிடம் அதிகாரத்தை மட்டும் ஒப்படைத்த நிகழ்வாகவே அது அமைந்தது.

ஜலியன்வாலா பாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டையரை சுட்டு வீழ்த்திய உத்தம்சிங்கை காந்தி கண்டித்தார்.
இந்த சம்பவமே காந்தி – நேதாஜி இடையேயான மோதலின் முக்கிய காரணமாக அமைந்தது.

1939-ஆம் ஆண்டு, காந்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
போஸின் செல்வாக்கு வளர்வதை உணர்ந்த காந்தி, அவருக்கு எதிராக உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
இதைக் காட்டிலும் அரசியலில் பெரிய அநியாயம் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையைப் பார்த்து மனம் உடைந்த போஸ், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே ஆண்டில் ஃபார்வர்ட் ப்ளாக் என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
(அந்த இயக்கத்தின் தமிழகத் தலைவராக இருந்தவர் தேவர்.)

பின்னர், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போஸ், அங்கிருந்து தப்பித்து ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு சென்றடைந்தார்.

ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்த போது,
“எதிர்கால இந்தியாவின் உச்சத் தலைவரே வருக” என்று ஹிட்லர் அவரை வரவேற்றதாக கூறப்படுகிறது.

அதுபோலவே ஜப்பான் பிரதமர் டோஜோவும்,
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அதன் முழு தலைமையும் போஸின் கைகளில்தான் இருக்கும் என தெரிவித்தார்.

ஆனால், இந்த இரு சந்தர்ப்பங்களிலும் நேதாஜி கூறிய பதில் ஒன்றே:
“எனக்கு என் நாட்டின் விடுதலைக்கு உதவி மட்டும் வேண்டும்.
நாட்டை ஆள்பவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.”

இப்போது புரிகிறதா,
காந்தி – நேரு தரப்பினர் ஏன் போஸின் மீது அதீத வெறுப்புடன் இருந்தார்கள் என்று?

கடந்த அறுபது ஆண்டுகளாக பள்ளிகளில் நாம் படித்து வந்தது உண்மையான வரலாறு அல்ல;
அது காங்கிரஸ் கட்சி வடிவமைத்த திரிபு செய்யப்பட்ட வரலாறு.

உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக அமைய வேண்டியவர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.
அவர் தான் பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்.
ஆனால் காந்தியின் ஆதரவால் நேரு பிரதமர் பதவியை கைப்பற்றினார்.

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி,
நேதாஜி தைவானில் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்படி எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை என தைவான் அரசு பின்னர் மறுத்தது.

சுதந்திர இந்தியாவின் உச்சப் பொறுப்பில் அமர வேண்டிய தலைவர்களை சதி மூலம் தோற்கடித்து,
அதிகாரத்தை கைப்பற்றிய காங்கிரஸின் துரோக வரலாறு மிக நீளமானது.

ஒருவேளை,
சுபாஷ் சந்திரபோஸ் தான் முதல் பிரதமராக இருந்திருந்தால் –
இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வல்லரசாக மாறியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here