Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsஇருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா... பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா
தீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மா
குழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மா
குழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா

ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமே
ஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமே

மஞ்ச நிறத்தழகி மஞ்சபாலிலே
குளித்து விளையாடுவதை வந்து பாருங்கள்
மார்போடு சேர்த்து வைத்து கமுகம் பூவினை
களித்து விளையாடுவதை வந்து பாருங்கள்
மஞ்ச நிறத்தழகி மஞ்சபாலிலே
குளித்து விளையாடுவதை வந்து பாருங்கள்
மார்போடு சேர்த்து வைத்து கமுகம் பூவினை
களித்து விளையாடுவதை வந்து பாருங்கள்

சிரிப்பாளே சிரிப்பாளே சத்தமாக சிரிப்பாளே
காப்பாளே காப்பாளே கச்சிதமா காப்பாளே
சிரிப்பாளே சிரிப்பாளே சத்தமாக சிரிப்பாளே
காப்பாளே காப்பாளே கச்சிதமா காப்பாளே

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா
தீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மா
குழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மா
குழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா

இன்னிசையான வில்லிசையை ரசித்து கேட்பதை வந்து பாருங்கள்
எத்திசை வாழும் மக்களையும் ரட்சித்து காப்பதை வந்து பாருங்கள்
இன்னிசையான வில்லிசையை ரசித்து கேட்பதை வந்து பாருங்கள்
எத்திசை வாழும் மக்களையும் ரட்சித்து காப்பதை வந்து பாருங்கள்

ஆராரோ பாடி குழந்தைகளை தூக்கிடுவா
ஆணவம் கொண்டோரை அடியோடு விரட்டிடுவா
ஆராரோ பாடி குழந்தைகளை தூக்கிடுவா
ஆணவம் கொண்டோரை அடியோடு விரட்டிடுவா

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா
தீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மா
குழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மா
குழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா

மணம் வீசும் பிச்சியில் மனதை பறிகொடுக்கும் குணத்தை வந்து பாருங்கள்
கொதிக்கும் எண்ணைய்யை கையிலே வாரி தேய்த்து மகிழ்வதை வந்து பாருங்கள்
மணம் வீசும் பிச்சியில் மனதை பறிகொடுக்கும் குணத்தை வந்து பாருங்கள்
கொதிக்கும் எண்ணைய்யை கையிலே வாரி தேய்த்து மகிழ்வதை வந்து பாருங்கள்

மஞ்சைபெட்டி உனக்கு இஷ்டமான சாதனம்
எலுமிச்சை மாலை உனக்கு அழகான தோற்றம்
மஞ்சைபெட்டி உனக்கு இஷ்டமான சாதனம்
எலுமிச்சை மாலை உனக்கு அழகான தோற்றம்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா
தீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மா
குழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மா
குழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா

ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமே
ஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமே
ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமே
ஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here