Type Here to Get Search Results !

வெற்றி புகழ் பாடிடுவோம் கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா... பாடல்

வெற்றி புகழ் பாடிடுவோம்
வேங்கை ஏறுபவளின் வெற்றி புகழ் பாடிடுவோம்

வெற்றி வடிவேலனுக்கு வெற்றி வேல் கொடுத்தவளின்
வெற்றி புகழ் பாடிடுவோம்

சகலகலாவல்லியே சந்தணமாரி
சகலத்தையும் தந்திடுவா சக்தி மாகாளி

ஒலிக்குதம்மா ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்
கேட்குதம்மா கேட்குதம்மா சன்னிதி மொத்தம்

தேவலோகம் வேணாமே ஸ்ரீ தேவி காளிகாம்பா
வீற்றிருக்கும் வீடே தேவலோகம் தானே
தொட்ட தெல்லாம் துலங்கிடுமே ஸ்ரீதேவி காளிகாம்பா
அருளாசி பெற்றால் எல்லாம் வெற்றி தானே

ஆடிபூரம் நன்னாளில் ஆடிடுவா ஊஞ்சல்
திருவிழாவின் மூன்றாம் நாளில் ஆடிடுவா ஊஞ்சல்

ஆடிபூரம் நன்னாளில் ஆடிடுவா ஊஞ்சல்
திருவிழாவின் மூன்றாம் நாளில் ஆடிடுவா ஊஞ்சல்

ஒலிக்குதம்மா ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்
கேட்குதம்மா கேட்குதம்மா சன்னிதி மொத்தம்

வெற்றி புகழ் பாடிடுவோம்
வேங்கை ஏறுபவளின் வெற்றி புகழ் பாடிடுவோம்

வெற்றி வடிவேலனுக்கு வெற்றி வேல் கொடுத்தவளின்
வெற்றி புகழ் பாடிடுவோம்

அழைத்த உடனே வந்திடு
அதிகம் அழைக்க வேணுமா
கடைசி வரையிலும் காத்திடு
கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா

ஆனந்த நடம் செய்யும் ஆதிசக்தி
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
உன் பொன்னடி போதுமே

தாலாட்டி சீராட்டனும் தங்க மகளே
தாலேலோ தாலேலோ பூ மகளே

தாலாட்டி சீராட்டனும் தங்க மகளே
தாலேலோ தாலேலோ பூ மகளே

சகலகலாவல்லியே சந்தணமாரி
சகலத்தையும் தந்திடுவா சக்தி மாகாளி

ஒலிக்குதம்மா ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்
கேட்குதம்மா கேட்குதம்மா சன்னிதி மொத்தம்

வெற்றி புகழ் பாடிடுவோம்
வேங்கை ஏறுபவளின் வெற்றி புகழ் பாடிடுவோம்

வெற்றி வடிவேலனுக்கு வெற்றி வேல் கொடுத்தவளின்
வெற்றி புகழ் பாடிடுவோம்

சகலகலாவல்லியே சந்தணமாரி
சகலத்தையும் தந்திடுவா சக்தி மாகாளி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.