Type Here to Get Search Results !

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே அள்ள அள்ள குறையாது... பாடல்

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே
அள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவே
எக்கணமும்
எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே

கங்கை நதி புனிதமம்மா என் அன்போ கங்கையம்மா
கானல் நீராய் கரைந்திடாதே காட்சி தராமல் ஒளிந்திடாதே

மழை மேகமெல்லாம் மாரியாக மாறுதம்மா கருமாரி உனக்காக
ஏழை மனமெல்லாம் சரமாரியாக நினைக்குதம்மா மகமாயி உனக்காக

என் விழியில் நீர் வழியாமல் இருக்க
உன் விழியை என் கருவிழிகள் கண்டால் போதுமே
வழியெல்லாம் துளி அளவும் பிழையில்லாமல் இருக்க
வழி துணையாக ஸ்ரீ தேவி காளிகாம்பா நீ வந்தால் போதுமே

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே
அள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவே
எக்கணமும்
எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே

மூடாத வாசலம்மா உந்தன் கதவு
நாடாத யாவருக்கும் இல்லை விடிவு
காமாட்சி நீயும் கருணை தெய்வம்
காலமெல்லாம் எனை காக்கும் தெய்வம்

சேமம் கோடி சேவிப்போம் நாடி
ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு கொண்டாட்டம் ஆடி

சேமம் கோடி சேவிப்போம் நாடி
ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு கொண்டாட்டம் ஆடி

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே
அள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவே
எக்கணமும்
எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே

கங்கை நதி புனிதமம்மா என் அன்போ கங்கையம்மா
கானல் நீராய் கரைந்திடாதே காட்சி தராமல் ஒளிந்திடாதே

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே
அள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவே
எக்கணமும்
எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.