Type Here to Get Search Results !

கோரமான ஒருத்தியும் சாந்தமான ஒருத்தியும் பாலவிளையிலே... பாடல்

கோரமான ஒருத்தியும் சாந்தமான ஒருத்தியும்
அக்கா தங்கை இருவர் பாலவிளையிலே
பாரமான துயரையும் தூர ஓட்டி விடவே

ஆராரோ ஆராரோ சொல்ல ஆசை
ஆராரோ பாடிட தீராத ஆசை

சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்
சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்

இசக்கி இசக்கி இன்னலை போக்கிடு
இசக்கி இசக்கி இன்பத்தை தந்திடு

சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்
சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்

பற்களை பார்த்தாலே பயமா இருக்கு
பனி போன்ற இதயம் உன்னிடம் இருக்கு
சிவந்த நாக்கு நீளமா இருக்கு
சிவப்பு புடவை உனக்கு அழகா இருக்கு

இசக்கி இசக்கி இன்னலை போக்கிடு
இசக்கி இசக்கி இன்பத்தை தந்திடு

சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்
சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்

கொட்டுகின்ற மத்தளமும் உன்னோடு ஆடுது
தட்டுகின்ற தாளமும் உன்னோடு ஆடுது
பச்ச தண்ணீரும் பன்னீரும் வாசம் உன் மேனியெல்லாம்
பச்ச பிள்ளைகளை தருவது நீயே தரணியெல்லாம்

இசக்கி இசக்கி இன்னலை போக்கிடு
இசக்கி இசக்கி இன்பத்தை தந்திடு

சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்
சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிரிப்பு சத்தம்
காக்கிறாள் காக்கிறாள் ஊரு மொத்தம்

ஆராரோ ஆராரோ சொல்ல ஆசை
ஆராரோ பாடிட தீராத ஆசை

கோரமான ஒருத்தியும் சாந்தமான ஒருத்தியும்
அக்கா தங்கை இருவர் பாலவிளையிலே
பாரமான துயரையும் தூர ஓட்டி விடவே

ஆராரோ ஆராரோ சொல்ல ஆசை
ஆராரோ பாடிட தீராத ஆசை

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.