Type Here to Get Search Results !

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா… பாடல்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா
நல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகா
எலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவா
சனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

படியேறி படியேறி உனை காண வருகையில்
தலையாட்டி தலையாட்டி எனை பார்த்து சிரிக்கிறாய்
அஞ்சுமலை நாதனின் அழகான சோதரா
ஆறுபடை நாயகனை வென்றவனே கணேசா

கொள்ளை கொள்ளும் அழகில் எந்தன் உள்ளம் மயங்குதே
கொள்ளை அடிக்க வந்தவனை ஓடவிட்ட கணேசா
கொள்ளை கொள்ளும் அழகில் எந்தன் உள்ளம் மயங்குதே
கொள்ளை அடிக்க வந்தவனை ஓடவிட்ட கணேசா

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா
நல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகா
எலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவா
சனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா

மாம்பழத்தை பெற்று கொள்ள உலகம் சுற்ற வில்லையே
உலகமே அம்மை அப்பன் என்று சுற்றி வந்தாயே
வடக்கே நிலமும் மூன்று பக்கம் கடலும் என
உயரமாக அமர்ந்து கொண்டு வேண்டியதை தருபவா

உடுக்கை சத்தம் கேட்குதய்யா மத்தியான வேளையிலே
தங்கமணி அடிக்குதய்யா எனக்கும் கேட்குது செவியிலே
உடுக்கை சத்தம் கேட்குதய்யா மத்தியான வேளையிலே
தங்கமணி அடிக்குதய்யா எனக்கும் கேட்குது செவியிலே

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா
நல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகா
எலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவா
சனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா

படமெடுத்து ஆடும் நாகங்களும் செங்கோல் ஏந்திய சாஸ்தாவும்
குடமெடுத்து நாங்கள் செய்கின்றோம் அபிஷேகம்
நுற்றிபதினெட்டு படிகளுடனே நூறு வருசமாக வாழ்கிறாயே
சங்கிலி தடம் உனக்கு சாட்சி ஆகுதே
இன்று வரைக்கும் எங்களுக்கு காட்சி ஆகுதே

தங்க புதையல் இங்கே இருக்குதய்யா
புதையல் கணபதி நாகர் சாஸ்தாதானையா
தங்க புதையல் இங்கே இருக்குதய்யா
புதையல் கணபதி நாகர் சாஸ்தாதானையா

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா
நல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகா
எலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவா
சனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை வாரி தந்திடும்
ஜெயத்தை வாரி தந்திடும்
ஸ்ரீ கணேசா கோஷமே புத்தியை தந்து காத்திடும்
புத்தியை தந்து காத்திடும்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.