Type Here to Get Search Results !

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா... பாடல்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
கூத்தனின் மாதவி ஆடி வருவா
ஓடி வருவா ஆடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
அவதான் அன்னிக்கரை பத்ரகாளி

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
கூத்தனின் மாதவி ஆடி வருவா
ஓடி வருவா ஆடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
அவதான் அன்னிக்கரை பத்ரகாளி

ஏழைகளின் குலதெய்வம் எங்கள் அன்னிக்கரை தாயி
பாழடைந்த தீவினையை நாசம் செய்யும் தேவி
சிவப்பு வண்ண சேலையும் செவ்வந்தி பூவும் சிங்காரி உனக்கு அழகு
கலகலன்னு சிரிப்பும் கருவண்டு கூந்தலும் கருமாரி உனக்கு அழகு
சிவப்பு வண்ண சேலையும் செவ்வந்தி பூவும் சிங்காரி உனக்கு அழகு
கலகலன்னு சிரிப்பும் கருவண்டு கூந்தலும் கருமாரி உனக்கு அழகு
அன்னிக்கரை பத்ரகாளி அகிலம் ஆளும் பத்ரகாளி
ஈசனின் இடபுறமே அன்னிக்கரை நாயகி

நெய்யாறு சுற்றிவர பாலாறு பெருக்கெடுக்க
இளநீற்று வெள்ளத்தில் நீச்சலிடுவா
நெய்யாறு சுற்றிவர பாலாறு பெருக்கெடுக்க
இளநீற்று வெள்ளத்தில் நீச்சலிடுவா

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
கூத்தனின் மாதவி ஆடி வருவா
ஓடி வருவா ஆடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
அவதான் அன்னிக்கரை பத்ரகாளி

பக்தி வெள்ளத்தில் முக்தி அடையவே
எண்ணி எண்ணி வந்தேனே அன்னிக்கரை நாயகி
கோடி அற்புதம் செய்யும் கோலவிழியாளை கண்டால் கோடி இன்பமே
பாடி பாடி அழைத்தால் பாவமெல்லாம் போக்கி
பத்திரமா நம்மை காத்திடுவாளே
பாடி பாடி அழைத்தால் பாவமெல்லாம் போக்கி
பத்திரமா நம்மை காத்திடுவாளே
தீப ஒளியில் ஜொலிப்பவளே அன்னிக்கரை நாயகி
கருமாரி முத்துமாரி உருமாறி வந்திடுவா அன்னிக்கரை நாயகி

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
கூத்தனின் மாதவி ஆடி வருவா
ஓடி வருவா ஆடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
அவதான் அன்னிக்கரை பத்ரகாளி

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
கூத்தனின் மாதவி ஆடி வருவா
ஓடி வருவா ஆடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா
அவதான் அன்னிக்கரை பத்ரகாளி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.