Type Here to Get Search Results !

ஆடி வாறா ஆடி வாறா பாட்டத்தறவிளை தாயவளே... பாடல்

ஆடி வாறா ஆடி வாறா பாட்டத்தறவிளை தாயவளே
ஆகாய கங்கையைப் போல் வேகமாக வாறாளே
அண்டம் நடுநடுங்க ஆவேச காளியவ கண்டம் நீக்கிடவே வாறாளே
பாட்டத்தறவிளையிலே பக்குவமா இடம்பிடித்த பத்ரகாளி வாறாளே

காளி ஓம்காளி பத்ரகாளி
மாரி முத்துமாரி கருமாரி
சக்தி ஒம் சக்தி பராசக்தி

அகிலம் முழுதும் உனதாட்சி புவனம் முழுதும் பூவாச்சி
ஓம் எனும் சத்தம் கடலும் ஒலிக்க நித்தம் அதனை உன் செவி கேட்க
உனக்காக பாடுது கடலு நினைக்காத நாளில்லை மனது
சரணாகதி ஒன்று போதுமே சகலமும் நீயே தெய்வமே

வாம்மா வாம்மா பத்ரகாளி
எங்கம்மா நீயே பாட்டத்தறவிளை பத்ரகாளி

வாம்மா வாம்மா பத்ரகாளி
எங்கம்மா நீயே பாட்டத்தறவிளை பத்ரகாளி

ஆடி வாறா ஆடி வாறா பாட்டத்தறவிளை தாயவளே
ஆகாய கங்கையைப் போல் வேகமாக வாறாளே
அண்டம் நடுநடுங்க ஆவேச காளியவ கண்டம் நீக்கிடவே வாறாளே
பாட்டத்தறவிளையிலே பக்குவமா இடம்பிடித்த பத்ரகாளி வாறாளே

காளி ஓம்காளி பத்ரகாளி
மாரி முத்துமாரி கருமாரி
சக்தி ஒம் சக்தி பராசக்தி

அன்ன நடை போட்டு சின்ன இடை அசைத்து
என்ன வேணும் கேட்டு தண்ணி போல தர வாறாளே
பச்சை புடவை அணிந்தாலே இச்சையெல்லாம் தீர்த்திடுவா
சிவப்பு புடவை அணிந்தாலே சீக்கிரமா வந்து காத்திடுவா
மங்கள வாழ்வாம் மாங்கல்யம் வேண்டிட
குங்கும மஞ்சள் நிலையாக தங்கிட
எங்கள் குல மகமாயி உடனிருந்து காத்திடுவா

வாம்மா வாம்மா பத்ரகாளி
எங்கம்மா நீயே பாட்டத்தறவிளை பத்ரகாளி

வாம்மா வாம்மா பத்ரகாளி
எங்கம்மா நீயே பாட்டத்தறவிளை பத்ரகாளி

ஆடி வாறா ஆடி வாறா பாட்டத்தறவிளை தாயவளே
ஆகாய கங்கையைப் போல் வேகமாக வாறாளே
அண்டம் நடுநடுங்க ஆவேச காளியவ கண்டம் நீக்கிடவே வாறாளே
பாட்டத்தறவிளையிலே பக்குவமா இடம்பிடித்த பத்ரகாளி வாறாளே

காளி ஓம்காளி பத்ரகாளி
மாரி முத்துமாரி கருமாரி
சக்தி ஒம் சக்தி பராசக்தி

பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.