Type Here to Get Search Results !

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்... பாடல்

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்
ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்
ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே

சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயே
சாகா ஒளி ஆண்டவா சரித்திரம் உனதே

சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயே
சாகா ஒளி ஆண்டவா சரித்திரம் உனதே

பஞ்சபூதமே உலகம் என்று தஞ்சம் அடைவோமே
கல்லிலும், மண்ணிலும் உள்ள உயிரே பரம்பொருள் என்போமே
யோகம் தியானம் தவம் செய்து சித்தர் நிலையை காண்போமே
காலம் தவறாது நித்தம் பூஜித்து ஒளியை நாம் பெறுவோமே

சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயே
சாகா ஒளி ஆண்டவா சரித்திரம் உனதே

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்
ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே

அண்ட வெளியின் தன்மைகள் யாவும்
பூமியிலும் மனிதனிலும் உள்ளதே
அதனை புரிந்து கொள்ள நமக்கு யோகா முத்திரை உதவுமே
புவியில் காண்பது அனைத்தும் இறைவனின் ரூபம்
அதை உணர்ந்தால் தீரும் நமது ஆன்மீக தாகம்

சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயே
சாகா ஒளி ஆண்டவா சரித்திரம் உனதே

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்
ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே

சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயே
சாகா ஒளி ஆண்டவா சரித்திரம் உனதே

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்
ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.