Type Here to Get Search Results !

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்... பாடல்

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்
அருமையான லட்டினை தின்று கொண்டு இருக்கிறார்

கணபதியே கருணை உள்ளம் கொண்டவா
குணமகனே குலம் காக்க ஓடிவா

கணபதியே கருணை உள்ளம் கொண்டவா
குணமகனே குலம் காக்க ஓடிவா

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்
அருமையான லட்டினை தின்று கொண்டு இருக்கிறார்

சேதிகேட்க சேதிகேட்க காதிரண்டும் போதுமா
பாதி கொம்பு பாதிகொம்பு எங்கேயய்யா கணேசா

நீ இல்லாத இடமில்லை
நீ இல்லாமல் எதுவுமில்லை

நீ இல்லாத இடமில்லை
நீ இல்லாமல் எதுவுமில்லை

பாக்க வேணும் கணபதி பாதுகாக்க வேணும் கணபதி
துக்கம் போக்கி சொர்க்கம் தர ஒடி வா கணபதி

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்
அருமையான லட்டினை தின்று கொண்டு இருக்கிறார்

கணபதியே கருணை உள்ளம் கொண்டவா
குணமகனே குலம் காக்க ஓடிவா

சுண்டல் தின்ன சுண்டெலி மீது ஏறி வருவாய்
கிண்டல் செய்பவருக்கும் அருளினை வாரி தருவாய்

ஆனை தலை உடையவா ஆறுமுகன் அண்ணனே
பானை வயிறு உடையவா பார்வதியின் பாலவிளை பாலனே

ஆனை தலை உடையவா ஆறுமுகன் அண்ணனே
பானை வயிறு உடையவா பார்வதியின் பாலவிளை பாலனே

ஒருபிடி மண் போதுமே கணேசன் வந்திடவே
இறுகபிடி நீயுமே இன்னல் யாவும் தீருமே

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்
அருமையான லட்டினை தின்று கொண்டு இருக்கிறார்

கணபதியே கருணை உள்ளம் கொண்டவா
குணமகனே குலம் காக்க ஓடிவா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.