Type Here to Get Search Results !

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளிஎங்க காளி... பாடல்

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளி
எங்க காளி
எமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளி
எங்க காளி
தேவாதி தேவருக்கும் மூத்தவளே காளி
எங்க காளி
தேடி வரும் பக்தர்களை காப்பவளே காளி
எங்க காளி

சிலையாக நின்றாலும் மலையாக மாறி தலையை காக்க வருவாயே
மாறாத மாற்றத்தை தந்திட மாரி நீயும் உருமாறி ஓடி வருவாயே

உன்னி கண்ணனின் வலமதில் இடம்பிடித்தாயே அன்னிகரை காளி
எண்ணி எண்ணி உருகுகிறேன் என்று நீயும் வருவாயோ
பண்ணிய வினையெல்லாம் பஷ்பமாகிட
புண்ணிய செயலெல்லாம் புனிதமாகிட
பிஞ்சு விரலில் உன் தடம் பதிய
நெஞ்சம் ஏங்குவதை அறிவாயோ

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளி
எங்க காளி
எமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளி
எங்க காளி
தேவாதி தேவருக்கும் மூத்தவளே காளி
எங்க காளி
தேடி வரும் பக்தர்களை காப்பவளே காளி
எங்க காளி

காளி காளி என அவள் நாமத்தை சொல்லிடவே
காலனும் அஞ்சி ஓடிடுவான்
தேவி தேவி என்றழைக்கையிலே
ஓடோடி வந்து கண்ணீரை துடைத்திடுவாள்

சிந்தையிலே உன்னை வைத்தேன் எந்தன் சிந்தையை மறந்தேன்
கன்னம் வீங்குதே கண்கள் சிவக்குதே கோபத்திலே நீ இருக்கையிலே

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளி
எங்க காளி
எமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளி
எங்க காளி
தேவாதி தேவருக்கும் மூத்தவளே காளி
எங்க காளி
தேடி வரும் பக்தர்களை காப்பவளே காளி
எங்க காளி

அஞ்சும் ஐம்பதும் ஒண்ணுதான் என காட்டிடுதே உன் கழுத்திலிருக்கும் மாலை
அஞ்சவிடாமல் அகங்காரத்தை அழித்து மும்மலங்களை
ஒழித்து காப்பதே உன் வேலை

சூலத்தை கொண்டு ஓடிவாம்மா
உலகத்தை காத்திடும் அன்னிக்கரை காளியம்மா
சூலத்தை கொண்டு ஓடிவாம்மா
உலகத்தை காத்திடும் அன்னிக்கரை காளியம்மா

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளி
எங்க காளி
எமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளி
எங்க காளி
தேவாதி தேவருக்கும் மூத்தவளே காளி
எங்க காளி
தேடி வரும் பக்தர்களை காப்பவளே காளி
எங்க காளி

சிலையாக நின்றாலும் மலையாக மாறி தலையை காக்க வருவாயே
மாறாத மாற்றத்தை தந்திட மாரி நீயும் உருமாறி ஓடி வருவாயே
சிலையாக நின்றாலும் மலையாக மாறி தலையை காக்க வருவாயே
மாறாத மாற்றத்தை தந்திட மாரி நீயும் உருமாறி ஓடி வருவாயே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.