Type Here to Get Search Results !

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி தெங்கம்பழஞ்சி இசக்கி... பாடல்

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி
ஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரி
எத்தனையோ குழந்தைகள் உன் மடியில்
அத்தனை தாய்களும் நன்றியோடு உன் காலடியில்
ஊரெல்லாம் வணங்கி நிக்குது உன்னை பாத்து
தெங்கம்பழஞ்சி இசக்கி

அழகான ரூபம் பயமான தோற்றம்
எழிலான உனை கண்டிட வந்திடும் மாற்றம்

அம்மா அம்மா இசக்கி அம்மா
வாம்மா வாம்மா இசக்கி அம்மா
தாம்மா தாம்மா இசக்கி அம்மா
தரணியெல்லாம் உன் அரசாட்சியம்மா

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி
ஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரி

மேளதாளம் கேட்டு மேனியெல்லாம் சிலுசிலுக்க
பாய்ந்து வரும் வேங்கையைப் போல் வாறாளே
கை நிறைய வளையலிட்டு முகத்தினிலே மஞ்சளிட்டு
கைலாசம் சென்ற அவ கலகலன்னு வாறாளே

குறமகளே வருக வருக
குறையெல்லாம் தீர்க்க வருக

குறமகளே வருக வருக
குறையெல்லாம் தீர்க்க வருக

அம்மா அம்மா இசக்கி அம்மா
வாம்மா வாம்மா இசக்கி அம்மா
தாம்மா தாம்மா இசக்கி அம்மா
தரணியெல்லாம் உன் அரசாட்சியம்மா

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி
ஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரி

நோய் தீர்க்கும் மருந்தும் மருத்துவரும் நீயே
எதிர்த்து வரும் எவரையும் ஜெயித்திடுவா தாயே
வாளேந்தி வில்லேந்தி போருக்கு போக
பயிற்சி தந்து பாதுகாக்கும் சக்தி
சூலோடும் சிவனோடும் நம்மருகில் வந்து
நம் உருவில் போரினை நடத்திடுவா தெங்கம்பழஞ்சி இசக்கி

சூலோடும் சிவனோடும் நம்மருகில் வந்து
நம் உருவில் போரினை நடத்திடுவா தெங்கம்பழஞ்சி இசக்கி

அம்மா அம்மா இசக்கி அம்மா
வாம்மா வாம்மா இசக்கி அம்மா
தாம்மா தாம்மா இசக்கி அம்மா
தரணியெல்லாம் உன் அரசாட்சியம்மா

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி
ஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரி
எத்தனையோ குழந்தைகள் உன் மடியில்
அத்தனை தாய்களும் நன்றியோடு உன் காலடியில்
ஊரெல்லாம் வணங்கி நிக்குது உன்னை பாத்து
தெங்கம்பழஞ்சி இசக்கி

அழகான ரூபம் பயமான தோற்றம்
எழிலான உனை கண்டிட வந்திடும் மாற்றம்

அம்மா அம்மா இசக்கி அம்மா
வாம்மா வாம்மா இசக்கி அம்மா
தாம்மா தாம்மா இசக்கி அம்மா
தரணியெல்லாம் உன் அரசாட்சியம்மா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.