Type Here to Get Search Results !

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே
வண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வா
எரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவே
விரைந்து நீயும் இங்கே வா வா வா

எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மா
எங்கள் பரம்பரையை காக்க வேணும் பாலவிளை அம்மா
சிங்காரி நீயும் சிரிச்சுவாம்மா ஓம்காரி நீயும் ஓடிவாம்மா

பணி எல்லாம் போட்டுவிட்டு பரம்பொருளே
வந்துள்ளேன் வரமளிக்க வா வா வா
கனிவான இதயத்தில் கரம்கோர்த்து
இடம்பிடிக்க கற்பகமே வா வா வா

எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மா
எங்கள் பரம்பரையை காக்க வேணும் பாலவிளை அம்மா
சிங்காரி நீயும் சிரிச்சுவாம்மா ஓம்காரி நீயும் ஓடிவாம்மா

அடிமுடி காணமுடியாதவனின் இணையே
அழகான கண்ணாத்தா வா வா வா
இடிபோல முழங்குதம்மா இன்னிசைகள்
நாளும் திருவடியை காட்டிட வா வா வா

எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மா
எங்கள் பரம்பரையை காக்க வேணும் பாலவிளை அம்மா
சிங்காரி நீயும் சிரிச்சுவாம்மா ஓம்காரி நீயும் ஓடிவாம்மா

காடு மலையெல்லாம் காமாட்சி
உனது காட்சி தந்திட வா வா
வீடுதோறும் விளக்கேற்றி வணங்குகிறோம்
விசாலாட்சி நீயும் ஜோதியாக வா வா வா

எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மா
எங்கள் பரம்பரையை காக்க வேணும் பாலவிளை அம்மா
சிங்காரி நீயும் சிரிச்சுவாம்மா ஓம்காரி நீயும் ஓடிவாம்மா

நாடிவரும் எங்களுக்கு நல்லதையே தந்திட
நல்ல முத்துமாரி வா வா வா
கூடி மக்கள் ஒன்று கூடி நிற்கிறோம்
ஆடி நீயும் வா வா வா

எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மா
எங்கள் பரம்பரையை காக்க வேணும் பாலவிளை அம்மா
சிங்காரி நீயும் சிரிச்சுவாம்மா ஓம்காரி நீயும் ஓடிவாம்மா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.