Type Here to Get Search Results !

ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஹரி ஹர சுதனே ஐயப்பா... பாடல்

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹர சுதனே ஐயப்பா
மாதவமணியே, மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா.

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹர சுதனே ஐயப்பா
மாதவமணியே, மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா.

நீதியின் குரலே நித்திய அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா,
நாதத்தின் ஒலியே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றும் ஐயப்பா.

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹர சுதனே ஐயப்பா
மாதவமணியே, மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா.

காலையின் கதிரே மாலையின் மதியே
கற்பூர ஜோதியே ஐயப்பா
ஆலய அரசே அன்பெனும் பரிசே
அபிஷேகப் பிரியனே ஐயப்பா.

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹர சுதனே ஐயப்பா
மாதவமணியே, மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா.

குழந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத மூர்த்தியே ஐயப்பா.

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹர சுதனே ஐயப்பா
மாதவமணியே, மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.