Type Here to Get Search Results !

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வா... பாடல்

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வா
சிவனின் மகனே கணபதியே சீக்கிரம் அருள் தர வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

சபரி மலையில் குடிகொண்ட சின்ன மணிகண்டா வா வா வா
அஞ்சுமலை வாசா ஐயப்பா ஐயம் போக்கிட வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

இன்பம் தந்திடும் இசக்கி அம்மா இன்னலை போக்கிட வா வா வா
குழந்தை வரம் தரும் இசக்கி அம்மா குறைவில்லா செல்வம் தர வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

பூமி பூத கணத்தின் நாயகனே புகழினை தந்திட வா வா வா
ஆளும் பூதத்தான் புவனம் ஆண்டிட வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

மந்திரம் தந்த மந்திர மூர்த்தி மகிழ்வுடன் வாழ்த்திட வா வா வா
முன்னோர் வணங்கிய மந்திரமூர்த்தி முன்னேற்றம் தந்திட வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

நாங்கள் வணங்கிடும் நாகராஜா நல்லதை தந்திட வா வா வா
நானிலம் நிறைந்த நாகராஜா நாகதோஷம் நீக்கிட வா வா வா
பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

பத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வா
அனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும் வருக வருக வருகவே
என்ன வேணும் கேளுங்களே எல்லாம் தருவா வந்து பாருங்களே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.