Type Here to Get Search Results !

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி... பாடல்

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி
சந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி
சந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதி

உடுக்கை சத்தம் ஒலிக்கையிலே உதடு கொஞ்சம் சிரிக்குது
படுக்க நானும் போகயிலே பகவதி உன் முகம் தெரியுது

மண்டை அப்பம் பகவதிக்கு
தண்டை அணிந்த பகவதிக்கு
மண்டை அப்பம் பகவதிக்கு
தண்டை அணிந்த பகவதிக்கு
வாழையடி வாழையாக வம்சம் தளைக்க வரம் அருளிடணும் மண்டைகாட்டம்மா
ஒலை சாப்பிலே விளக்கு எரியவிட்டு ஏழைக்கு பசியாற்றிய மண்டைகாட்டம்மா

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி
சந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி

பலவண்ண பட்டாடை மேனியினை அலங்கரிக்க
கலகலக்கும் வளையல் கைமுழுக்க கிலுகிலுக்க
புத்தரிசி பொங்காலை புனிதவதி உனக்கு
எத்திசையையும் காத்திடும் மண்டைகாட்டம்மா

ஆராரோ பாட ஆசைபட்டால் ஆனந்த கூத்தாடி வந்திடுவா
ஆலமர விழுதாக கருமாரி தாயோ உருமாறி காட்சி தந்திடுவா
ஆராரோ பாட ஆசைபட்டால் ஆனந்த கூத்தாடி வந்திடுவா
ஆலமர விழுதாக கருமாரி தாயோ உருமாறி காட்சி தந்திடுவா

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி
சந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி
குங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவி
மங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவி

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி
சந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.