Type Here to Get Search Results !

குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே பாலவிளை காளி... பாடல்

குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே
குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே

சேவை என்றும் உனக்கம்மா சேயாக எனை காத்திடம்மா
தேவை உந்தன் அரவணைப்பு அதுவே எனக்கு ரொம்ப விருப்பு

காளி காளி காளி பாலவிளை காளி
கதி கதி கதி நீயே கதி பாலவிளை காளி

அவனி முழுவதும் அரசாட்சி அவளின்றி நடக்காது ஒரு காட்சி
தில்லையில் மன்னன் திருச்சியில் அண்ணன் திருவிளையாடல் வேணாமம்மா
நெல்லையில் நாதன் திருமலையில் கண்ணன் பாலவிளையில் நீயம்மா
தில்லையில் மன்னன் திருச்சியில் அண்ணன் திருவிளையாடல் வேணாமம்மா
நெல்லையில் நாதன் திருமலையில் கண்ணன் பாலவிளையில் நீயம்மா

காளி காளி காளி பாலவிளை காளி
கதி கதி கதி நீயே கதி பாலவிளை காளி

குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே
குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே

சேவை என்றும் உனக்கம்மா சேயாக எனை காத்திடம்மா
தேவை உந்தன் அரவணைப்பு அதுவே எனக்கு ரொம்ப விருப்பு

பாலும் பழமும் வேணாமே பாவை அன்பு போதுமே
யானை தலையனை பெற்றதனால்
யானை மீது வலம் வருகிறாய்
சேனை படைபோல் நாங்கள் சுற்ற
சேரும் கரையை காட்டிடுவாய்

பாலும் பழமும் வேணாமே பாவை அன்பு போதுமே
யானை தலையனை பெற்றதனால்
யானை மீது வலம் வருகிறாய்
சேனை படைபோல் நாங்கள் சுற்ற
சேரும் கரையை காட்டிடுவாய்
ஒருநாளும் மூடாது உந்தன் கதவு
பகலவனும் பகல் முழுதும் பார்க்கிறான்
பாதி கணம் தவறாது நீ எனை காக்கிறாய்
பகலவனும் பகல் முழுதும் பார்க்கிறான்
பாதி கணம் தவறாது நீ எனை காக்கிறாய்

காளி காளி காளி பாலவிளை காளி
கதி கதி கதி நீயே கதி பாலவிளை காளி

குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே
குலுங்கிடும் வளையல்கள் உந்தன் கையிலே
குதூகல மயக்கம் எந்தன் நெஞ்சிலே

சேவை என்றும் உனக்கம்மா சேயாக எனை காத்திடம்மா
தேவை உந்தன் அரவணைப்பு அதுவே எனக்கு ரொம்ப விருப்பு

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.