வாசல் தேடி வந்தேன் நானே
வாடாத மலரே பூந்தேனே
வருடங்கள் நூறு ஆனாலும் உந்தன்
வண்ண கோலம் மாறாதே
சீதப்பால் இசக்கியம்மா சீக்கிரமா வாடியம்மா
சின்னபிள்ளை அழைக்கிறேன் சிங்காரி ஒடிவாம்மா
ஆராரோ ஒலிக்கின்ற வீட்டிலெல்லாம்
ஆனந்த நடனம் செய்பவளே
ஆகாயம் சென்றே ஒளிந்தாலும்
ஆகாத வேலை யார் செய்தாலும்
உன் ஆலயம் சரணடைய வைப்பாயே
சீதப்பால் இசக்கியம்மா சீக்கிரமா வாடியம்மா
சின்னபிள்ளை அழைக்கிறேன் சிங்காரி ஒடிவாம்மா
எங்க அம்மா எங்க அம்மா இசக்கி அம்மா
சர்வ சக்தி அம்மா சீதப்பால் இசக்கி அம்மா
ரூபம் தான் கோரம் குணமோ குழந்தை
தோற்றம் தான் கோபம் மனமோ குழந்தை
சீதப்பால் இசக்கியம்மா சீக்கிரமா வாடியம்மா
சின்னபிள்ளை அழைக்கிறேன் சிங்காரி ஒடிவாம்மா
பவுர்ணமி நிலவாக
பசும்பாலின் குணமாக
பட்டாடை உடுத்தி வருவது கண்கொள்ளா காட்சி
அங்கவரை கேட்குது சிரிப்பு சத்தம்
இங்கேயும் ஒலிக்குது சலங்கை சத்தம்
சீதப்பால் இசக்கியம்மா சீக்கிரமா வாடியம்மா
சின்னபிள்ளை அழைக்கிறேன் சிங்காரி ஒடிவாம்மா
அசைந்து வரும் காற்று
எரிகின்ற நெருப்பு
எல்லாமே நாடுது உன் சன்னதியை
அழகான இசையும்
ஆழிமழை நீரும்
தேடுது உன் சன்னதியை
இனியவளே இசக்கி அம்மா
தூயவளே சீதப்பால் இசக்கி அம்மா
சீதப்பால் இசக்கியம்மா சீக்கிரமா வாடியம்மா
சின்னபிள்ளை அழைக்கிறேன் சிங்காரி ஒடிவாம்மா
பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd