வாலை தாயே குமரி பகவதி
நான் வணங்க வந்தேன் உன் திருவடி
அழகிய குமரியே பகவதி
நான் காண வந்தேன் உன் திருவடி
சின்ன பெண்ணே சிங்கார கண்ணே
கன்னியாகுமரி உன் காலடி மண்ணே
முக்கடல் உன்னை தாலாட்ட
முண்டாசு கவி உன்னை சீராட்ட
வணங்க வாரேன் வாலையே
வரம் நீ தரணும் தரணும்…..
சிவனும் உன்னை மணம் முடிக்க வந்தானடி வர நின்னானடி
சேவல் விடியும் முன்னே கூவியதடி நன்றாக கூவியதடி
பொழுது போதாது என்று நின்னானடி சுசீந்திரத்தில் வராமல் நின்னானடி
கன்னி பொண்ணு உனக்கோ கோபமடி சிவன் வராத கோபமடி குங்குமத்தை கொட்டியதில் மணல் மாறியது சிவப்பாகடி இன்றும் இருக்குதடி
சின்ன பெண்ணே சிங்கார கண்ணே
கன்னியாகுமரி உன் காலடி மண்ணே
முக்கடல் உன்னை தாலாட்ட
முண்டாசு கவி உன்னை சீராட்ட
வணங்க வாரேன் வாலையே
வரம் நீ தரணும் தரணும்…..
வாலை தாயே குமரி பகவதி
நான் வணங்க வந்தேன் உன் திருவடி
அழகிய குமரியே பகவதி
நான் காண வந்தேன் உன் திருவடி
மினுமினுன்னு மின்னுதடி
அது தங்கமல்ல, அது வைரமல்ல, அது மாணிக்கமடி
வளைந்து நெளிந்து வருவான்டி
அது மீனும் இல்ல அது தேனும் இல்ல
அது நாகமடி அதன் மாணிக்கமடி
வெள்ளைகாரன் வந்தான்டி கொள்ளை அடிக்க மாணிக்கத்தை கொள்ளை அடிக்க
வந்த வாசல் கிழக்கு வாசல் மூடியதடி அன்றே மூடியதடி
சின்ன பெண்ணே சிங்கார கண்ணே
கன்னியாகுமரி உன் காலடி மண்ணே
முக்கடல் உன்னை தாலாட்ட
முண்டாசு கவி உன்னை சீராட்ட
வணங்க வாரேன் வாலையே
வரம் நீ தரணும் தரணும்…..
வாலை தாயே குமரி பகவதி
நான் வணங்க வந்தேன் உன் திருவடி
அழகிய குமரியே பகவதி
நான் காண வந்தேன் உன் திருவடி
சின்ன பெண்ணே சிங்கார கண்ணே
கன்னியாகுமரி உன் காலடி மண்ணே
முக்கடல் உன்னை தாலாட்ட
முண்டாசு கவி உன்னை சீராட்ட
வணங்க வாரேன் வாலையே
வரம் நீ தரணும் தரணும்…..