தேசமே என் தேசமே சுதந்திர தேசமே
தேசமே என் தேசமே சுதந்திர தேசமே
பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்
பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்
உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்
உன் அங்கத்தை காக்க எத்தணை உயிர்கள் பலியாயின
சிவப்பு உதிரத்தால் படைத்தனர் வரலாறு
சிந்து நதியையும் மீட்டு படைப்போம் தனி வரலாறு
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து

கப்பலை ஓட்டி சொத்தை இழந்தான் வஉசி
கர்ப்பிணி மனைவியை விட்டு சென்றாண் வாஞ்சி
வந்தே மாதரம் கோஷமிட்டான் நேதாஜி
பாடியே படையை திரட்டினான் பாரதி
எதற்காக பாரத்தாயே உனக்காக
பாரத மக்களே உங்களுக்காக
தன்னை எண்ணாது தன் குடும்பத்தை
எண்ணாது பாரத தாய்க்கு அர்பணமானார்கள்
அன்னையின் பிள்ளைகளே..
அவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்
பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்
உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்
உன் அங்கத்தை காக்க எத்தணை உயிர்கள் பலியாயின
சிவப்பு உதிரத்தால் படைத்தனர் வரலாறு
சிந்து நதியையும் மீட்டு படைப்போம் தனி வரலாறு
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
கட்டபொம்மன் தூக்கு கயிற்றை முத்தமிட்டான்
மருது பாண்டியர்கள் காளையார் கோவிலுக்காக மாண்டார்
அழகு முத்து பீரங்கியால் சல்லடை யானான்
சிங்கம் சிவாவோ தொழு நோயாளியானான்
எதற்காக பாரத்தாயே உனக்காக
பாரத மக்களே உங்களுக்காக
தன்னை எண்ணாது தன் குடும்பத்தை
எண்ணாது பாரத தாய்க்கு அர்பணமானார்கள்
அன்னையின் பிள்ளைகளே..
அவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்
பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்
உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்
உன் அங்கத்தை காக்க எத்தணை உயிர்கள் பலியாயின
சிவப்பு உதிரத்தால் படைத்தனர் வரலாறு
சிந்து நதியையும் மீட்டு படைப்போம் தனி வரலாறு
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
வேலுநாச்சியோ வேங்கை போல் சிறி பாய்ந்தாள்
குயிலியோ குளமென வெடிகுண்டிற்குள் குதித்தாள்
நாஞ்சிலாவோ மார்பகத்தை வெட்டி கொடுத்தாள்
ஜான்சி ராணியோ போர்களம் புகுந்தாள்
இன்னும் எத்தனை யோ எத்தனை பேர்
அத்தனை பேருக்கும் வணக்கங்கள்
எதற்காக பாரத்தாயே உனக்காக
பாரத மக்களே உங்களுக்காக
தன்னை எண்ணாது தன் குடும்பத்தை
எண்ணாது பாரத தாய்க்கு அர்பணமானார்கள்
அன்னையின் பிள்ளைகளே..
அவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்
பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்
உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்
உன் அங்கத்தை காக்க எத்தணை உயிர்கள் பலியாயின
சிவப்பு உதிரத்தால் படைத்தனர் வரலாறு
சிந்து நதியையும் மீட்டு படைப்போம் தனி வரலாறு
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
உரக்க சொல்லு- ஜெய்ஹிந்த்து
தேசமே என் தேசமே சுதந்திர தேசமே
தேசமே என் தேசமே சுதந்திர தேசமே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
தேசமே என் தேசமே சுதந்திர தேசமே.. பாடல் | Aanmeega Bhairav