பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.
இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.
மண்ணுலகு வாழவென்று அவதரித்தானே
அவன் மாட்சியுற சபரிகிரி மீ தமர்ந்தானே
இந்த விண்ணுலகும் ஏற்றுகின்ற பெருமை பெற்றானே
புகழ் வீரமணி கண்டனவன் தாள் பணிவோமே.
இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.
பந்தளத்து மன்னனுக்கு பாலக னாகி – என்றும்
பணிவுடனே அற்புதங்கள் பலவும் புரிந்தான்
இனிவந்த வேலை முடிந்ததென்று வனமது சென்றான்
அங்கு வண்ணமுற தவ மதிலே வாழ்வது கண்டான்.
இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.
சரணமையா என்றுரைத்தால் சஞ்சலம் தீர்ப்பான
தக்க தருணமதில் வந்துதவி கரமும் கொடுப்பான்
இனி மரணபயம் ஏதுமில்லை மன்ன னவனால்
மனக்கண்களிலே கண்டு துதி பாடிடுவோமே.
இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே
தினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே.