என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
விபூதியும் சந்தனமும் எங்கே மணக்குது?
வீரமணிகண்டனார் மேலே மணக்குது!
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
அத்தரும் ஜவ்வாதும் எங்கே மணக்குது?
அரிஹரபுத்திரனார் மேலே மணக்குது!
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
முல்லைப்பொடி மஞ்சட்பொடி எங்கே மணக்குது?
மாளிகைப்புரத்தம்மா மேலே மணக்குது!
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
சர்க்கரை பாயாசம் எங்கே மணக்குது?
சபரிகிரீசனார் சன்னிதியில் மணக்குது!
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
சரண கோஷமது எங்கே ஒலிக்குது?
சாஸ்தாவின் சன்னிதியில் நித்தம் ஒலிக்குது!
என்ன மணக்குது? எங்கே மணக்குது?
கற்பூர வாஸமது எங்கே மணக்குது?
காந்தகிரி வாசனார் மேலே மணக்குது !
என்ன மணக்குது? எங்கே மணக்குது?.. பாடல் | Aanmeega Bhairav