Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா... பாடல்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா… பாடல்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்,
வல்வினை ஓடும், பலவினை ஓடும் அருள் மழை பொழிபவள் நாளும்,
நீலநிறத்தோடு ஞாலம் அளித்தவள், காளி எனத் திரிசூலம் எடுத்தவள்,
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்,
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here