Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeSpiritualityமதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்

மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்

நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நாளைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here