சின்ன சின்ன மூக்குத்தியும்
பெரிய பெரிய பொட்டும் வைத்து
கண் நிறைய மையும் போட்டு
கலர் கலரா புடவை கட்டி
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
கை நிறைய வளையலிட்டு
கலகலன்னு சிரிச்சுக் கிட்டு
தலை நிறைய பூவும் வைச்சு
காலிலே சலங்கையிட்டு
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
நெற்றியிலே குங்குமமும்
முகம் நிறைய மஞ்சளுமாய்
ஒட்டியாணம் கட்டிக்கிட்டு
ஒய்யாரமாய் பார்த்துக்கிட்டு
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
செம்பவள வாயுடனே
கழுத்து நிறைய அணிகலனும்
பக்தர்களின் வேண்டுதலை
காதினிலே கேட்டுகிட்டு
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
ஆலமர சோலையிலே
அழகான தென்றலிலே
எட்டுதிக்கு கண்ணும் வைத்து
எல்லோரையும் காத்துகிட்டு
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
நெற்றிசுட்டி அணிந்த வளாய்
நேர் எதிரே இருந்து கொண்டு
அருள் மழையை பொழிந்தவளாய்
சிங்கம் மீது அமர்ந்து கொண்டு
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
சின்ன சின்ன மூக்குத்தியும்
பெரிய பெரிய பொட்டும் வைத்து
கண் நிறைய மையும் போட்டு
கலர் கலரா புடவை கட்டி
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
இருக்கிறாளே தாய் ஒருத்தி
கூட்டாலுமூடு நகரினிலே
பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Crop Network Pvt Ltd
இருக்கிறாளே தாய் ஒருத்தி கூட்டாலுமூடு நகரினிலே… பாடல் Aanmeega Bhairav