கணபதிவிளை வாழும் கணேசா
உன் கருணையே கருணை கணேசா
கரங்களை குவித்தேன் கணேசா
கண்கண்ட தெய்வமே கணேசா.
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
ஆற்றங்கரையில் நீ இருக்கவில்லை இருப்பினும்
ஆனந்தமே கணேசா
சேத்திரமோ சரியில்லை இருப்பினும்
சேமமே கணேசா
மந்திரங்கள் ஒலிக்கவில்லை இருப்பினும்
மங்களமே கணேசா
கணேசா கணேசா சிவனின் மைந்தனே
கணேசா கணேசா பார்வதி பாலனே
கணேசா கணேசா முருகனின் அண்ணனே
கணேசா கணேசா எங்களின் நண்பனே
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
கணபதிவிளை வாழும் கணேசா
உன் கருணையே கருணை கணேசா
கரங்களை குவித்தேன் கணேசா
கண்கண்ட தெய்வமே கணேசா.
செந்தமிழில் பாடுகின்றேன் செல்வமே கணேசா
யானை தலை அசைந்தாட ஞானம் தரும் கணேசா
தந்தம் ஒடித்து காவியம் தந்தவனே கணேசா
கணேசா கணேசா மூஷிகம் இல்லையே
கணேசா கணேசா மோதகம் இல்லையே
கணேசா கணேசா எதுவும் இல்லையே
கணேசா கணேசா இருப்பினும் வேற்றுமை இல்லையே
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்கு
வந்தனம் வந்தனம் வந்தனமே
கணபதிவிளை வாழும் கணேசா
உன் கருணையே கருணை கணேசா
கரங்களை குவித்தேன் கணேசா
கண்கண்ட தெய்வமே கணேசா.
பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Crop Network Pvt Ltd
கணபதிவிளை வாழும் கணேசா உன் கருணையே கருணை கணேசா… பாடல் | Aanmeega Bhairav