நான் உன்னை தேடி வரவில்லை
நான் உன்னை பாடி அழைக்கின்றேன்
காலை கண் விழித்ததும் உன் தரிசனம்
பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்
அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன்
நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு
தாயே நீ உடுத்தும் பட்டு தரணும் ஓர்மெட்டு
ஒருநாள் உன் தரிசனம் பெறாவிட்டால் மனமோ ஏங்குது
ஒரு கணம் என் மனதில் தோன்றாவிட்டால்
மனமே இல்லை என்றாகிறது
ஆயிரம் ஆலயம் இருப்பினும்
ஆத்தா உன் ஆலயம் என் சொர்க்கம்
போகின்ற பாதையிலும் வாழ்கின்ற வாழ்க்கையிலும்
உன்னை நினையாத நேரமில்லை
நீ என்னை மறந்தாலும் நான் உனை மறவேன்
நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு
தாயே நீ உடுத்தும் பட்டு தரணும் ஓர்மெட்டு
நான் உன்னை தேடி வரவில்லை
நான் உன்னை பாடி அழைக்கின்றேன்
காலை கண் விழித்ததும் உன் தரிசனம்
பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்
அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன்
அழகுமிகு தேவதையே உன் அழகிற்கு நான் அடிமை
நினைத்த கணமே மனதில் நின்று சிரிப்பவளே
உலகில் நான் பெற்றதெல்லாம் நீ தந்தது
கைமாறாக நான் உன் புடவையா மாறி விடவா
சுற்றி திற்கும் தீபம் சற்று மங்கலாக
பளிச்சென்று பளபளக்கிறது உன் முகமாக
ஆயிரம் மக்களுக்கு தாயே – அதில்
நான் உன் செல்லபிள்ளையே
நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு
தாயே நீ உடுத்தும் பட்டு தரணும் ஓர்மெட்டு
நான் உன்னை தேடி வரவில்லை
நான் உன்னை பாடி அழைக்கின்றேன்
காலை கண் விழித்ததும் உன் தரிசனம்
பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்
அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன்
கோயிலிலே வந்து விட்டால் கோடி இன்பம் பெருகுதம்மா
வாயிலிலே கால் வைத்தால் சொர்க்க பூமி ஆகுதம்மா
நினைக்காத நேரமும் இல்லை
நினைவில்லாமல் போனதும் இல்லை
ஆத்தா நீ தான்டி என் சொத்து
கண்பாத்தா நான் தான்டி உன் முத்து
நான் ஏறிய மேடைக்கெல்லாம் பிள்ளையார் சுழி உன் காலடி
காலமெல்லாம் என்னோடு இருப்பாயடி
நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு
தாயே நீ உடுத்தும் பட்டு தரணும் ஓர்மெட்டு
நான் உன்னை தேடி வரவில்லை
நான் உன்னை பாடி அழைக்கின்றேன்
காலை கண் விழித்ததும் உன் தரிசனம்
பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்
அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு… பாடல் | Aanmeega Bhairav