ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனே
ஐயப்பா ஐயப்பா கோபாலனின் மகனே
கார்த்திகை மாசம் பிறந்ததே
கருணாகரனே உன்னை காணவே
சாமியே சரணம் என்று சொல்லியே
மாலை அணிந்தோம் ஐயனே
பம்பா நதியில் குளித்திடவே
காலையும், மாலையும் குளிக்கின்றோம்
பந்தள மன்னனின் பிள்ளையே
நாங்களும் ஆனோம் ஐயப்பனே
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
கார்த்திகை மாசம் பிறந்ததே
கருணாகரனே உன்னை காணவே
சாமியே சரணம் என்று சொல்லியே
மாலை அணிந்தோம் ஐயனே
பம்பா நதியில் குளித்திடவே
காலையும், மாலையும் குளிக்கின்றோம்
பந்தள மன்னனின் பிள்ளையே
நாங்களும் ஆனோம் ஐயப்பனே
கற்பூர வாசனை என்னை உருக்குதப்பா
நான் அணிந்த மாலை என்னை மனிதனாக்குதப்பா
சரண கோஷம் எந்தன் சங்கடங்கள் தீர்க்குதப்பா
கறுத்த ஆடை என் மனதை வெளுக்க செய்குதப்பா
எரிமேலி பேட்டை துள்ளல் ஏற்றம் மிக தருகுதப்பா
என் மனமோ உன்னை காண ஏங்குதப்பா
அனைவரும் சொல்வோம் சுவாமியே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
கார்த்திகை மாசம் பிறந்ததே
கருணாகரனே உன்னை காணவே
சாமியே சரணம் என்று சொல்லியே
மாலை அணிந்தோம் ஐயனே
பம்பா நதியில் குளித்திடவே
காலையும், மாலையும் குளிக்கின்றோம்
பந்தள மன்னனின் பிள்ளையே
நாங்களும் ஆனோம் ஐயப்பனே
விரதம் என்பது சுமையல்ல சுகமானது
ஒரு மண்டலம் முழுவதும் வரமாகுது
பெண்கள் எல்லாம் தயாகின்றாள்
பெற்ற தாயோ தெய்வமாகிறாள்
கற்ற கல்வியோ அதிகம் மாலையிட்ட பொழுது
உற்ற துணை நீயே என் வாழ் நாள் முழுது
அனைவரும் சொல்வோம் சுவாமியே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
கார்த்திகை மாசம் பிறந்ததே
கருணாகரனே உன்னை காணவே
சாமியே சரணம் என்று சொல்லியே
மாலை அணிந்தோம் ஐயனே
பம்பா நதியில் குளித்திடவே
காலையும், மாலையும் குளிக்கின்றோம்
பந்தள மன்னனின் பிள்ளையே
நாங்களும் ஆனோம் ஐயப்பனே
சின்முத்திரை காட்டி சின்னவனாய் இருப்பவனே
இருமுடிகட்டி உன்னை காண வந்தால்
நீயோ தத்வமஸி என்கிறாய்
நெஞ்சுருகி நெய்கொண்டு வந்தேன்
நீ குளிக்கும் அழகை காண
சபரி முழுதும் மணக்கும் மணம்
என் மேனியிலும் மணக்குதய்யா
மனிதனானேன் உன்னால் நானும் மனிதனானேன்
உன் காட்சி அதுவே சாட்சி
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
வன்புலி வாகனனே வா வா வா
சபரிநாதனே வா வா வா
கார்த்திகை மாசம் பிறந்ததே
கருணாகரனே உன்னை காணவே
சாமியே சரணம் என்று சொல்லியே
மாலை அணிந்தோம் ஐயனே
பம்பா நதியில் குளித்திடவே
காலையும், மாலையும் குளிக்கின்றோம்
பந்தள மன்னனின் பிள்ளையே
நாங்களும் ஆனோம் ஐயப்பனே
ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனே
ஐயப்பா ஐயப்பா கோபாலனின் மகனே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனே… பாடல் | சபரிமலை பம்பா வாசனே | Aanmeega Bhairav