திருப்பாவை – பாசுரம் பதின்மூன்று
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று
வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்…..
திருவெம்பாவை – பாசுரம் பதின்மூன்று
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்…..