Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள்

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள் பலதேவ்ஜியு கோயில் – பலராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்று. தௌஜி மகாராஜ் கோயில் – கிருஷ்ணரின் அண்ணனான பலராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம். ஜகந்நாதர் கோயில்...
HomeSongsஊராளி தாயே வளம் தருவாயே... பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயே… பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயே
நீதான்டி எங்கள் குலசாமி
ஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயி
நடப்பது உன் அரசாட்சி

பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக
பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக

ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே

ஆயிரம் ஜன்மம் எடுத்து வந்து
மனம் ஏங்குது உனை காண
ஏழை நெஞ்சம் ஈஸ்வரன் துணையை
நினைந்து துடிக்குது தினம் காண
அம்மாடி ஆத்தா நீ கடைக்கண் பாத்தா
கிடைக்கும் அனைத்துமே

எம்மாடி எம்மா எங்களோட அம்மா தந்திடணும் ஒரு வரமே
எம்மாடி எம்மா எங்களோட அம்மா தந்திடணும் ஒரு வரமே

ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே

ஊராளி தாயே வளம் தருவாயே
நீதான்டி எங்கள் குலசாமி
ஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயி
நடப்பது உன் அரசாட்சி

பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக
பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக

தஞ்சம் அடைந்தோரின் பஞ்சம் எல்லாம் போக்கி
நெஞ்சம் நிறைய செய்பவளே
கொஞ்சும் மழலையை மிஞ்சிடும் அளவிற்கு
கொஞ்சி விளையாடிடுவா
பாபம் செய்வோர் மீது கோபம் கொண்டு
எந்த பரிதாபத்தையும் காட்ட மாட்டா

ஊராளி தாயிடம் போராட வேண்டாம் கேட்டதை தந்திடுவா
ஊராளி தாயிடம் போராட வேண்டாம் கேட்டதை தந்திடுவா

ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே

ஊராளி தாயே வளம் தருவாயே
நீதான்டி எங்கள் குலசாமி
ஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயி
நடப்பது உன் அரசாட்சி

பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக
பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக

மாற்றம் வேண்டிட ஏற்றம் தந்திடுவா
ஏமாற்றம் தரமாட்டா
மலைப்போல் வருகின்ற துயரினையும்
மடுவாய் மாற்றி களைந்திடுவா
காலையில் தோன்றி மாலையில் மறையாமல்
காலமெல்லாம் உடனிருப்பா

காளின்னு அழைத்தா காட்சியும் தந்து நம்மை காத்திடுவா
காளின்னு அழைத்தா காட்சியும் தந்து நம்மை காத்திடுவா

ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே

ஊராளி தாயே வளம் தருவாயே
நீதான்டி எங்கள் குலசாமி
ஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயி
நடப்பது உன் அரசாட்சி

பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக
பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாக
மாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே
ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமே
பராசக்தி பராசக்தி வந்திடுவாளே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here