Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeSongsதினம் உன் தரிசனம் தர வேணும்... பாடல்

தினம் உன் தரிசனம் தர வேணும்… பாடல்

தினம் உன் தரிசனம் தர வேணும்
தினம் உனை நான் கண்டிட வேணும்
ஒரு வரம் தருவாயா உனை காண
ஒவ்வொரு பிறவியும் உனை காண
ஆயிரம் கண்ணுடையவளே ஊராளி
உன் கடைக்கண் எனை காணாதா

மெய்யான அன்பாலே பொய்யில்லா உனை காணுவேன்
தரணியை ஆளும் தாமரை நாயகி
கோமாளி என்னை ஏமாளி ஆக்காமல்
ஊராளி அன்னை காத்திடுவா

பாம்பாக வேம்பாக உருமாறி வாம்மா
உயிரோடு உணர்வான கருமாரி அம்மா
பாம்பாக வேம்பாக உருமாறி வாம்மா
உயிரோடு உணர்வான கருமாரி அம்மா

தினம் உன் தரிசனம் தர வேணும்
தினம் உனை நான் கண்டிட வேணும்
ஒரு வரம் தருவாயா உனை காண
ஒவ்வொரு பிறவியும் உனை காண
ஆயிரம் கண்ணுடையவளே ஊராளி
உன் கடைக்கண் எனை காணாதா

சித்து வேலை செய்யும் முத்து முத்து மாரி நீதாண்டி எங்க சொத்து…
பட்டு சேலைக்காரி மொட்டு மல்லி சூடி மெட்டெடுத்து தந்து கருணையைக் காட்டு

வம்சம் தழைக்கணும் தாயே
தீவினையை துவம்சம் செய்திடு நீயே
வம்சம் தழைக்கணும் தாயே
தீவினையை துவம்சம் செய்திடு நீயே

தினம் உன் தரிசனம் தர வேணும்
தினம் உனை நான் கண்டிட வேணும்
ஒரு வரம் தருவாயா உனை காண
ஒவ்வொரு பிறவியும் உனை காண
ஆயிரம் கண்ணுடையவளே ஊராளி
உன் கடைக்கண் எனை காணாதா

செவ்வந்தி பூவும் சாமந்தி பூவும் ஒன்னா சிரிச்சிடுது
சிங்காரி உன் அழகை கண்டு
குங்கும மஞ்சளை குறையாம தந்து மாங்கல்யம் காத்திடம்மா

உன்னை வணங்கிட எனக்கொரு குறையில்லை
காரணம் என்றுமே நான் உன் செல்லப்பிள்ளை
உன்னை வணங்கிட எனக்கொரு குறையில்லை
காரணம் என்றுமே நான் உன் செல்லப்பிள்ளை

தினம் உன் தரிசனம் தர வேணும்
தினம் உனை நான் கண்டிட வேணும்
ஒரு வரம் தருவாயா உனை காண
ஒவ்வொரு பிறவியும் உனை காண
ஆயிரம் கண்ணுடையவளே ஊராளி
உன் கடைக்கண் எனை காணாதா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here