மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்
குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பா
ஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கி
ஏழேழு ஜென்மம் காத்திடுவா
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
வேலாடும் வேலனையும்
மூஷிகம் ஏறுபவனையும் ஈன்றவளே
எனக்கு துணை உனக்கிணை யாரம்மா
அசுரனை ஆயுதத்தால் சூரனை சூலத்தால் மாய்த்தவளே
நல்லோரை காக்க தீயோரை அழிக்க
உனைவிட ஓர் தெய்வம் இல்லையம்மா
புவனம் ஆளும் புவனேஸ்வரி
ஊராளி ஆளும் பத்ரகாளி
புவனம் ஆளும் புவனேஸ்வரி
ஊராளி ஆளும் பத்ரகாளி
ஊரெங்கும் ஒலிக்குது உன் சரணங்களே…
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்
குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பா
ஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கி
ஏழேழு ஜென்மம் காத்திடுவா
வேப்பிலையைக் கட்டி வேதனையை தீர்த்து
வெற்றியை வாரி தருபவளே
திரிசூலம் ஏந்தி மூலோகம் காக்க வேங்கை வலம் வருபவளே
அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி
ஊராளி ஆளும் பத்ரகாளி
அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி
ஊராளி ஆளும் பத்ரகாளி
ஊரெங்கும் ஒலிக்குது உன் சரணங்களே…
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்
குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பா
ஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கி
ஏழேழு ஜென்மம் காத்திடுவா
மாவிளக்கு தீபம் எலுமிச்சை மாலை மாற்றங்களை தந்திடுதே
நான் பாடும் தாயே உன் புகழை பாட எனக்கொரு வரம் தந்தாயே
தைமாதம் கொடை விழா
தரணியெங்கும் திருவிழா
தைமாதம் கொடை விழா
தரணியெங்கும் திருவிழா
ஊரெங்கும் ஒலிக்குது உன் சரணங்களே…
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்
குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பா
ஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கி
ஏழேழு ஜென்மம் காத்திடுவா
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
சிவ சிவ சங்கரி ஊராளி காளி
ஜெய ஜெய சங்கரி ஊராளி தேவி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd