Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsபுல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா... பாடல்

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா… பாடல்

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா
கோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா

மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா உன்னையும் என்னையும் காத்திடுவான் அன்னிக்கரை கண்ணா

கிருஷ்ண கிருஷ்ண ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா

மயில்பீலி நாதனே சின்ன பிள்ளை கண்ணா கண்ணா
உலகளந்த உத்தமனே குள்ளமான அன்னிக்கரை கண்ணா

பத்து அவதாரமும் கண்ணா உன் ரூபமே
ரூபத்தை வணங்கிட வந்து சேரும் யாவுமே
பத்து அவதாரமும் கண்ணா உன் ரூபமே
ரூபத்தை வணங்கிட வந்து சேரும் யாவுமே

கிருஷ்ண கிருஷ்ண ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா
கோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா
மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா உன்னையும் என்னையும் காத்திடுவான் அன்னிக்கரை கண்ணா

கோபியர்கள் மன்னனே செல்லபிள்ளை கண்ணா கண்ணா
கோகுலத்தின் கொழுந்தே தேவகி கண்ணா கண்ணா

நீலமேனி அழகை கண்டு கண்களும் சிரிக்குதே
ஆயர்பாடி அழகனே உனை கொஞ்ச கைகள் துடிக்குதே
நீலமேனி அழகை கண்டு கண்களும் சிரிக்குதே
ஆயர்பாடி அழகனே உனை கொஞ்ச கைகள் துடிக்குதே

கிருஷ்ண கிருஷ்ண ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா
கோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா
மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா உன்னையும் என்னையும் காத்திடுவான் அன்னிக்கரை கண்ணா

வாயிலே உலகைக் காட்டிய கண்ணா கண்ணா
உரலிலே கட்டுப்பட்ட உத்தம கண்ணா கண்ணா
வாயிலே உலகைக் காட்டிய கண்ணா கண்ணா
உரலிலே கட்டுப்பட்ட உத்தம கண்ணா கண்ணா

தவழ்ந்து வரும் கண்ணனை கண்டு உள்ளம் குளிருதே
குளிருகின்ற மனமதில் லீலை செய்ய ஓடிவா
தவழ்ந்து வரும் கண்ணனை கண்டு உள்ளம் குளிருதே
குளிருகின்ற மனமதில் லீலை செய்ய ஓடிவா

கிருஷ்ண கிருஷ்ண ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா
கோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா
புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா
கோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா

மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா உன்னையும் என்னையும் காத்திடுவான் அன்னிக்கரை கண்ணா

கிருஷ்ண கிருஷ்ண ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா
அன்னிக்கரை கிருஷ்ணா கிருஷ்ணா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here