கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனே
கண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே
வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா
ஆடிவா அன்னிக்கரை மாதவா
வாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவா
வஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா
கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதே
கோவமில்லா உன் விழிகள் கொஞ்சிட ஏங்குதே

ஓடகுழல் ஊதி ஊதி மாட்டினை மேய்த்தவா
நஞ்சுப்பால் ஊட்ட வந்த அரக்கியை மாய்த்தவா
ஓடகுழல் ஊதி ஊதி மாட்டினை மேய்த்தவா
நஞ்சுப்பால் ஊட்ட வந்த அரக்கியை மாய்த்தவா
நர்த்தனம் ஆடிய இடம் காளிங்கன் தலை
கோவர்த்தனம் நீ தூக்கியது தனி ஒரு கலை
நர்த்தனம் ஆடிய இடம் காளிங்கன் தலை
கோவர்த்தனம் நீ தூக்கியது தனி ஒரு கலை
வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா
ஆடிவா அன்னிக்கரை மாதவா
வாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவா
வஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா
அசுரன் என்பதால் தாய் மாமனையே கொன்றவா
அசுரர்களை அழிப்பதற்க்கே பிறவிஎடுத்து வந்தவா
அசுரன் என்பதால் தாய் மாமனையே கொன்றவா
அசுரர்களை அழிப்பதற்க்கே பிறவிஎடுத்து வந்தவா
மயக்கிடும் எழிலால் மயக்கிடுவான்
மாய தந்திரங்கள் பல செய்திடுவான்
மயக்கிடும் எழிலால் மயக்கிடுவான்
மாய தந்திரங்கள் பல செய்திடுவான்
வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா
ஆடிவா அன்னிக்கரை மாதவா
வாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவா
வஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா
தூது என்ற பெயரில் பல சூதுகளை செய்தவா
தூக்கத்திலும் நினைக்கின்றேன் தூக்கிவிட ஓடிவா
தூது என்ற பெயரில் பல சூதுகளை செய்தவா
தூக்கத்திலும் நினைக்கின்றேன் தூக்கிவிட ஓடிவா
வண்ண மயில் பீலி அசைந்து அசைந்து ஆடும்
சின்ன பறவைகள் கூட உன்னை வியந்து வியந்து பாடும்
வண்ண மயில் பீலி அசைந்து அசைந்து ஆடும்
சின்ன பறவைகள் கூட உன்னை வியந்து வியந்து பாடும்
வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா
ஆடிவா அன்னிக்கரை மாதவா
வாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவா
வஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா
கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதே
கோவமில்லா உன் விழிகள் கொஞ்சிட ஏங்குதே
கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதே
கோவமில்லா உன் விழிகள் கொஞ்சிட ஏங்குதே
கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனே
கண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd