சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவா
மூன்று கண் உள்ளது என்று மூன்றாவது கண்ணை காட்டியவா
வழி காட்டியவா
முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்கு
யோக முத்திரையில் அற்புத பலன் இருக்கு
முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்கு
யோக முத்திரையில் அற்புத பலன் இருக்கு
சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவா
மூன்று கண் உள்ளது என்று மூன்றாவது கண்ணை காட்டியவா
வழி காட்டியவா
பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளியூட்ட
இரவும் பகலும் புருவமத்தியில் ஒளியாகிறாய்
பிரபஞ்ச சக்தி அற்புத சக்தி என்றே
பிரபஞ்ச உயிர்க்கெலாம் புரிய வைத்த சக்தி
சித்தி தெளிந்த சித்தர் கூட்டம்
பக்தி காட்டும் பக்தி கூட்டம்
எத்தகைய கூட்டமும் காண துடிப்பது பிரபஞ்ச சக்தி
முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்கு
யோக முத்திரையில் அற்புத பலன் இருக்கு
சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவா
மூன்று கண் உள்ளது என்று மூன்றாவது கண்ணை காட்டியவா
வழி காட்டியவா
கண்ணின் மணிகள் இருபுறம் இருக்க
புருவமத்தியில் கண்ணின் கரு இருக்க
கண்ணை திறந்தவனே சாகா ஒளி ஆண்டவா
அகத்திய முனியும் தேடி திரிந்தான்
அவனும் உனை கண்டு கொண்டான்
சித்தி தெளிந்த சித்தர் கூட்டம்
பக்தி காட்டும் பக்தி கூட்டம்
எத்தகைய கூட்டமும் காண துடிப்பது பிரபஞ்ச சக்தி
முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்கு
யோக முத்திரையில் அற்புத பலன் இருக்கு
சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவா
மூன்று கண் உள்ளது என்று மூன்றாவது கண்ணை காட்டியவா
வழி காட்டியவா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd