Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றி… பாடல்

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றிஇயற்கை பிரபஞ்சமே சாகா ஒளி ஆண்டவா போற்றிகண்ணின் ஒளியே சாகா ஒளி ஆண்டவா போற்றிமூன்றாம் கண்ணை காட்டிய சாகா ஒளி ஆண்டவா போற்றிபிறப்பு இறப்பை உணர...
HomeSongsபச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா... பாடல்

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா… பாடல்

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா
இச்சை எல்லாம் தீர்க்குமே
புவி மீதுள்ள எச்சங்கள்
வாழ்வை மிச்சமில்லாமல் கரை சேர்க்குமே

நான் சுவாசிக்கும் காற்றும் இறைவா உன் சுவாசமே
கறுக்கின்ற மேகமும் பொழிகின்ற மழையும் இறைவா உன் வரமே
ஓடிவரும் நதியும் புல்லாங்குழல் ஒலியும் இறைவா உன் நாமமே
பனிமலை சாரலும் வயல்வெளி பாதையும் காட்டுதே இறைவா உன் வழியே

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா
இச்சை எல்லாம் தீர்க்குமே
புவி மீதுள்ள எச்சங்கள்
வாழ்வை மிச்சமில்லாமல் கரை சேர்க்குமே

ஓயாத கடல் அலையும் மணக்கின்ற மணமும் இறைவா உன் ரூபமே
அசைகின்ற மரங்களும் அசையாத பாறையும் இறைவா உன் கோலமே
காய்க்கின்ற கனிகளும் கருணை மனங்களும் இறைவா உன் தோற்றமே
வாய் மொழிகளும் வாழ்க்கை விதிகளும் இறைவா உன் விளையாடலே

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா
இச்சை எல்லாம் தீர்க்குமே
புவி மீதுள்ள எச்சங்கள்
வாழ்வை மிச்சமில்லாமல் கரை சேர்க்குமே

தேயாத பௌர்ணமியும் தெரியாத நிலவும் இறைவா உன் தரிசனமே
தித்திக்கும் இனிப்பும் தெவிட்டாத சுவையும் இறைவா உன் இனிமையே
அண்ட கோள்கள் அழகாக சுற்ற இறைவா நீயே காரணமே
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியே நான் பாட நீ தந்த வரமே

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா
இச்சை எல்லாம் தீர்க்குமே
புவி மீதுள்ள எச்சங்கள்
வாழ்வை மிச்சமில்லாமல் கரை சேர்க்குமே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here