உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
அங்கு இல்லாதாரும் உள்ளவரும் பேதமில்லையே
அருள் வள்ளலே, உன் அன்பினுக்கோர் எல்லை இல்லையே
அச்சங்கோவில் ஆரியங்காவு, சென்று வந்தோம்
குளத்துப்புழை பாலனையும் கண்டு வந்தோம்
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
எருமேலி பேட்டை துள்ளி, ஆடி வந்தோம்
எம்பெருமான் தரிசனமும் காண வந்தோம்
சுவாமி திந்தக்கத்தோம் – ஐயப்ப திந்தக்கத்தோம்
சுவாமி திந்தக்கத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம்
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
ஏறாத மலைதனிலே ஏறி வந்தோம்
ஏகாந்த மூர்த்தி உனைக் காண வந்தோம்
கிழவனையும் குமரனாக்கி கூட்டிச் செல்கின்றாய்
அழகனே உன் அற்புதங்கள் புகல லாகுமோ
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
ஊமையையும் வாய்திறந்து பேச வைக்கின்றாய்
உலகத்திலே காணொணாத அதிசயமன்றோ
நெய்ய பிஷேகம் செய்ய ஓடி வந்தோம்
நித்ய பிரம்மச்சாரி உமைக் காணவந்தோம்
சுவாமி திந்தக்கத்தோம் – ஐயப்ப திந்தக்கத்தோம்
சுவாமி திந்தக்கத்தோம் – ஐயப்ப திந்தக்கத்தோம்
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே
சுவாமி வேளையிலே – ஐயப்பா வேளையிலே
உந்தன் சரணகோஷம் கேட்குதையா
சாலையிலே – மலைச்சாரலிலே
உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே.. பாடல் | Aanmeega Bhairav