உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்
உண்மையில் நீ தானப்பா – ஐயப்பா
உண்மையில் நீ தானப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
நெற்றியில் திருநீறும் பக்தியால் பன்னீரும்
நான் உனக்குத் தருவேனப்பா – ஐயப்பா
நான் உனக்குத் தருவேனப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
கார்த்திகை மாதத்தில் கழுத்தினில் மாலையிட்டு
கற்பூரம் ஏற்றுவேனப்பா – ஐயப்பா
கற்பூரம் ஏற்றுவேனப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
குழந்தையாய் நீயிருந்தால் குங்குமப் பொட்டிட்டு
கொஞ்சிடத்தோன்றுமப்பா – ஐயப்பா
கொஞ்சிடத்தோன்றுமப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
பம்பையில் நீராடி பக்தருடன் கூடி
சரணம் பாடுவேனப்பா – ஐயப்பா
சரணம் பாடுவேனப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
பொய்யொன்றும் பேசாமல் மெய்யே தினம்பேசி
நெய்யுடன் வருவேனப்பா – ஐயப்பா
நெய்யுடன் வருவேனப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
தை முதல் நாளன்று பொன்னம்பல மேட்டில்
தரிசனம் செய்வேனப்பா – மகர
தரிசனம் செய்வேனப்பா
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களை
காத்திட வேண்டுமப்பா – ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா
உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்… பாடல் | Aanmeega Bhairav