Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeSongsஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்... பாடல்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்… பாடல்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்
எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்
முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம்

ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிது
ஆதிமூல நாயகனைக் கண்ட மதமிது
ஓதிஓதி உண்மைதனை உரைத்த மதமிது
நீதிதேவன் கோயில்கொண்டு நிலைத்த மதமிது

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

அன்புவழி காட்டுவதும் ஹிந்து தர்மமே
இன்பநிலை கூட்டுவதும் ஹிந்து தர்மமே
முன்பு உலகை உயர்த்தியதும் ஹிந்து தர்மமே
துன்ப நிலை நீக்கியதும் ஹிந்து தர்மமே

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

பெற்ற தாயைப் பிறந்த மக்கள் வெறுப்பதுமுண்டா
உற்ற தந்தை இல்லையென்று உரைப்பவருண்டா
முற்றும் உணர்ந்து ஹிந்த தர்ம முறையறியாமல்
தெற்றுக் கூறும் தீயர்மனம் திருந்தச் செய்குவோம்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

உனது நாடு உனது வேதம் உரிமைக்காக வா
தனது மானம் தனது மதம் தர்மம் காக்க வா
இனிய பூமி எங்கள் பூமி என்று சொல்ல வா
புனித மதம் ஹிந்து மதம் என்று புகழ வா

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here