வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் – ஓர் பார்வை
முன்னுரை
அறத்தை நிலைநாட்ட அறவடிவாகவே அவதரித்த அவதார வரிஷ்டர் ஸ்ரீராமகிருஷ்ணர் தம் அருளால் சுவாமி விவேகானந்தர் உலகெல்லாம் சனாதன தர்மமாம் இந்து சமய உண்மைகளை பரப்பினார். அவர் சிகாகோவில் நடைபெற்ற சாவ சமய மாநாட்டில் பங்கு கொண்டு இந்து சமயத்தின் பெருமைகளை பறை சாற்றினார். இந்து சமயம் குறித்து அவர் உரையாற்றியதை கேட்ட ஒரு பெண்மணி “இந்து சமயம் குறித்து பேச அவர் எழுந்தார். அவர் பேசி முடித்தது அமர்ந்த பொழுது ஹிந்து சமயம் உருவாக்கப்பட்டிருந்தது” என்று பெருமிதத்துடன் கூறினார். இவ்வாறு இந்து சமயத்திற்கு புதுவடிவம் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இந்து ஒரு மூடன். இழிந்தவன் என்று மாற்று மதத்தினர் செய்த பிரச்சாரத்தை தன்னுடைய வீர உரைகளால் முறியடித்தவர்.
இந்து சமயத்திற்கு ஒரு புதுவடிவம் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர் உலகிலேயே உன்னத தத்துவங்கள் அடங்கிய ஒரு சமயம் இந்து சமயம்.உலக சமயங்களுக்கெல்லாம் தாய் இந்து சமயம் என நிரூபித்தவர் சுவாமி விவேகானந்தர். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பொழுது நமது சமயப் பெருமைகளை அங்குள்ளோருக்கு விளக்கினார். அதேவேளையில் அவர்களின் இயக்கமான ஒன்றிணைந்து செயல்படும் திறன் நம்மவர்க்கு வேண்டும் என்பதையும் கண்டறிந்தார். எனவே பாரதம் திரும்பிய பின் பேலூரில் இராமகிருஷ்ண மிஷன் மடம் போன்றவை தொடங்கினார்.
தன்னுடன் இருந்த சகோதரத் துறவிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஆன்மீக பணி செய்ய ஆவன செய்தார். பாரதத்தின் உயிர்நாடி ஆன்மீகம் என்பதை உணர்ந்த அவர் “பாரத தேசம் ஆனது அதன் உயர்நிலை ஆகிய ஆன்மீகத்தை (சமயத்தை) கைவிடுமானால் அது உலகின் பிற வல்லரசுகளைப் போல அழிந்து விடுவது உறுதி” என்கிறார். ஆன்மீக பிரச்சாரம் இன்றேல் மக்கள் நமது சமயப் பெருமைகளையும் தத்துவங்களையும் மறந்து விடுவர் எனும் உண்மையைக் கண்டறிந்தார். அவ்வாறு ஆன்மீகம் அழிந்தால் பாரதம் அழியும். எனவே பாரத ஆன்மீகம் தழைக்க வேண்டுமென விரும்பினார்.
ஆன்மீகம் தழைக்க வேண்டுமானால் அனைத்து கிராமங்களிலும் ஆசிரமங்கள் அமைய வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். ஆசிரமங்களில் ”ஆத்மனோ மோஷார்த்தம் ஐகத் ஹிதாய ச” (தன்னுடைய முகதி உலக நன்மை என்ற குறிக்கோளுடன் ஆசிரம துறவிகள் வாழ வேண்டுமென அவர் கனவு கண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் கனவு நிறைவேற அமைக்கப்பெற்றதே வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம்.
ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம் ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்குன்றின் மேல் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆண்களுக்கான ஆசிரமம் அடிவாரத்தில் அமையும். அங்கு திருமண வாழ்வை துறந்து பிரம்மச்சாரிகளும், துறவிகளும் வாழ்வார்கள் என்பதால் தானோ என்னவோ முருகப்பெருமானும் வள்ளி தெய்வானை இன்றி காட்சி தருகிறார்.
ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சுன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி பல வெளி மாவட்டங்களிலும் தன் பணியை செய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகத்திற்கு ஏற்ற இடமென்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும். இங்குள்ள மருந்துவாழ் மலை ஞானிகளுக்கும். துறவிகளுக்கும் தியான சித்திக்கு பிறப்பிடமாக இருக்கிறது. இந்தியாவின் பல மாகாணங்களில் பிறந்த படித்த மேதைகள், பேராசிரியர்கள் பலர் அஞ்ஞானத்தை வெறுத்து மெய்ஞானம் உணர்ந்து தவ வாழ்வை இறுக பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தலங்களில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தனர் என்பதை சான்றுகள் உணர்த்துகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள திருக்கோயில்கள் எண்ணற்றவை. இவைகளில் இறைவன் தன் பல்வேறு வடிவங்களை நிறுத்தி அருள் பாலிக்கிறார். இவற்றில் ஒன்று தான் வெள்ளிமலை முருகன் கோவில்.
பெயர்க் காரணம்
“சேயோன் என்ற தொல்காப்பியரின் மேய மைவரையுலகமும்” கூற்றிற்கிணங்க முருகப்பெருமான் விரும்பி உறையும் இடம் மலை. குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் குடியிருப்பான் என்பதற்கிணங்க 200 அடி உயர குன்றின் மேல் கோயில் கொண்டுள்ளார் முருகப்பெருமான், இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் பாலசுப்ரமணிய சுவாமி. முருகன் கோவில் கொண்ட புனிதமான இடங்கள் பல. இதில் குமரி மாவட்டத்தில் குமாரகோவில், மருங்கூர், தோவாளை போன்ற சிறந்த தலங்களில் ஒன்று தான் குறுங்கட்டிப் பொத்தை என்றழைக்கப்படும் வெள்ளிமைல. இதை வெள்ளியங்கிரி எனவும் அழைப்பர்.
இமயத்தில் சிவபிரான் குடியிருக்கும் கைலாயமலைக்கு வெள்ளிமலை என ஒரு பெயர் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்கது என இம்மலைக்கும் வெள்ளிமலை என பெயரிட்டிருக்கலாம். மேலும் இம்மலையை சுற்றிலும் குறிப்பாக வடக்குப் பாகத்தில் காக்காப்பொன் எனப்படும் அப்ரகம் அதிகமாக காணப்பட்டது. அது சூரிய ஒளியில் மின்னும் போது வெள்ளி போல் தோற்றமளித்ததால் வெள்ளிமலை எனப் பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இரணியல் மேலத் தெருவைச் சார்ந்த குணமாலை செட்டியார் இம்மலையை வெள்ளியங்கிரி எனவும், வெள்ளிமலை என்றும் அழைத்ததாக கூறுவர். மேலும் முன்பு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் அதிகமாக வந்து சிறப்புப் பூஜைகளில் கலந்து கொள்வர். இந்த காரணத்தால் வெள்ளிமலை எனப் பெயர் வந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
குறுங்கட்டி பொத்தை என பெயர் வரவும் காரணம் உண்டு. முன்பு இம்மலையை சுற்றி குறுந்தட்டி செடிகள் அதிகமாக வளர்ந்திருந்தன. எனவே இவ்விடம் குறுந்தட்டி பொத்தை என அழைக்கப்பட்டது. இதுவே மருவி குறுங்கட்டி பொத்தை ஆயிற்று.
ஆக வெள்ளிமலை என்றால் வெள்ளியம்பலத்தில் நடமிடும் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் கயிலை மலையே ஆகும். முன்பு பணவசதி படைத்த உயர்மக்களும் பணபலம், ஆட்பலம் கொண்டவர்களும் மற்றும் கல்வி அறிவு கொண்ட பின் தங்கிய மக்கள் சிலருமே கோவில் மண்டபத்தினுள் செல்ல அனுமதியுண்டு.
இயற்கை அமைப்பு
கன்னியாகுமரிமாவட்டம் கல்குளம் தாலுகா இரணியல் குருத்தங்கொடு சாலைக்கு தெற்கே இரணியல் முட்டம் சாலைக்கு கிழக்கே திருநயினார் குறிச்சி செதுவூர் சாலைக்கு வடக்கேட் செதுவூர் குருந்தங்கோடு சாலைக்கு மேற்கே நீர்வளம், நிலவளம் களியம், கனிம வளம் மிகுந்த பகுதியில் அமைந்த புண்ணிய தலம் வெள்ளிமலை முருகள் கோயில் அமைந்திருக்கும் குன்றும் ஆசிரமம் அமைந்திருக்கும் இடமும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ளது. சுற்றிலும் வயல் வெளிகளும் தென்னந்தோப்புகளும் இது மருத நிலமோ என வியக்க வைக்கும்.
குன்றின் மீது நின்று தெற்கே பார்த்தால் கடற்பரப்பு தெரியும் அழகு அது நெய்தல் போல வியக்க வைக்கும் வடக்கே தெரியும் மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதிப் பகுதியின் அழகு குறிஞ்சி நிலம் போல காட்சி அளிக்கும்.
நான்கு புறமும் இயற்கை அன்னை தன் பச்சை நிறத்தை பரப்பி மரம், செடி வாய்க்கால், குளங்கள், ஆறுகள், வீடுகள் எனக்காட்சியளிக்கிறது. மொத்தத்தில் இயற்கை அழகுடன் ஒரு ஆன்மீக அமைதியும் நிறைந்த பகுதி வெள்ளிமலை. காண்போருக்கு கண்கொள்ளாக் காட்சி அளிப்பதுடன் மன அமைதியும் தரும் தவ பூமி வெள்ளிமலை: வெள்ளிமலை இயற்கை பிரியர்களுக்கும் ஆன்மீக பிரியர்களுக்கும் மிகவும் ஏற்றதொரு தலமாக விளங்குகிறது.
வெள்ளிமலையில் செம்மண், கரிசல் மண், களிமண் முதலிய பல்வேறு விதமான மண் வகைகள் காணப்படுகிறது. இங்கு பலவகையான மரங்கள். செடி கொடிகள் போன்றவை வளர்கின்றன. ஆனாலும் தென்னை மரங்கள் அதிக அளவில் வளர்கின்றன. தென்னை மரங்கள் வெள்ளிமலை மக்களின் கற்பக விருட்சகமாக உள்ளது. மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகளும் காணப்படுகின்றன. யம மாவட்டத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான வள்ளியாறு. வெள்ளிமலையை சுற்றியுள்ள மக்களின் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. வெள்ளிமலை அனைவருக்கும் ஏற்ற தட்பவெட்ப நிலைகளை கொண்டது. வெள்ளிமலை பகுதியை சுற்றியுள்ள மலை வயல்வெளி, கடல் ஆகியவைகளே இதற்கு காரணம், இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
போக்குவரத்து வசதி
முன்பெல்லாம் போக்குவரத்து வசதிகள் எல்லாம் கிடையாது. ஒரு ஆ செல்லும் அளவுக்கு ஒற்றையடி பாதையாகவும் கரடு முரடாகவும் காணப்பட்டது. செதுவூர் திரு, பெருமாள் குட்டி நாடார். உன்னங்குளம் திரு. எம்.எஸ் பாண்டியன் ஆகியோரின் முயற்சியால் கோயிலை சுற்றி சாலைகள் வெட்டப்பட்டன. உரப்பளவிளை திரு. ரத்தினராஜ் அவர்கள் முயற்சியால் சாலை முழு வடிவம் பெற்று சீர் செய்யப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ. பாலையா அவர்கள் முயற்சியால் கோவிலை சுற்றி தார் ரோடும் மேலே ஏறுவதற்கு சிமெண்ட் ரோடும் போடப்பட்டது.
இத்தகைய பெருமைக்குரிய இயற்கை செல்வங்களைக் கொண்ட வெள்ளிமலை கிராமம் அங்கே அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தினால் மேலும் பெருமையடைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.