திருப்பாவை – பாசுரம் பத்து
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே!
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்….
திருவெம்பாவை – பாசுரம் பத்து
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பி ணாப்பிள்ளைகாள்!
கோதில் குலத்தரன்றன் கோயிற்பி ணாப்பிள்ளைகாள்!
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆர்அயலார்?
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆர்அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்….