திருப்பாவை – பாசுரம் பதினொன்று
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்
புற்றர வல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்….
திருவெம்பாவை – பாசுரம் பதினொன்று
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்….