திருப்பாவை – பாசுரம் பதினேழு
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம் பெருமாட்டி யசோதா அறிவுறாய்
எம் பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா
செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்….
திருவெம்பாவை – பாசுரம் பதினேழு
செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்….