Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeSongsமுருகா முருகா முருகா முருகா அரகரோகரா... பாடல்

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா… பாடல்

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்; அரகரோகரா
தேடும் கயமாமுகனைச் செருவில் அரகரோகரா
சாடும் தனியானைச் சகோதரனே அரகரோகரா

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ அரகரோகரா
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்; அரகரோகரா
கந்தா! கதிர்வேலவனே! உமையாள் அரகரோகரா
மைந்தா! குமரா! மறைநாயகனே அரகரோகரா

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் அரகரோகரா
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் அரகரோகரா
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் அரகரோகரா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே அரகரோகரா

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்
முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here