Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள்

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள் பலதேவ்ஜியு கோயில் – பலராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்று. தௌஜி மகாராஜ் கோயில் – கிருஷ்ணரின் அண்ணனான பலராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம். ஜகந்நாதர் கோயில்...
HomeSongsவாறாளே வாறாளே பத்ரகாளி... ஊராளி விளை வாழும் பத்ரகாளி... பாடல்

வாறாளே வாறாளே பத்ரகாளி… ஊராளி விளை வாழும் பத்ரகாளி… பாடல்

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

பூக்களெல்லாம் விரியுதம்மா உனக்கு மாலையாக
பசுக்களெல்லாம் பால் சுரக்குதம்மா பாலால் தாலாட்ட
பட்டு சேலை கட்டி கொண்டு
எட்டு திசையும் காத்துகிட்டு
மெட்டெடுத்து பாடுவது கேட்குதாம்மா
நாங்க மெட்டெடுத்து பாடுவது கேட்குதாம்மா

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

ஜோதியிலே ஜொலிக்குதம்மா உந்தன்முகம்
கோடிமக்கள் நெஞ்சில் வாழும் பத்ரகாளி
தண்ணியில எரியுதம்மா உந்தன் தீபம்
கிணற்று நீரில் மாயம் செய்யும் பத்ரகாளி
ஏழைகளின் குலதெய்வம் வாழவைக்கும் முத்துமாரி
காளை வாகனம் கொண்டவனின் இடமிருந்து காக்கும் பத்ரகாளி
கோழை என்னை ஆதரிக்க வாளேந்தி வில்லேந்தி வந்திடுவா
கோபாலன் சோதரியே கோலவிழி கொண்டவளே பத்ரகாளி
ஊராளி பத்ரகாளி உலகை ஆளும் பத்ரகாளி
மாய உலகில் மயங்கிடாமல் காத்திடம்மா
ஆய கலை அனைத்தும் தந்திடம்மா

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

மயிலேறி வருவோனை மடியிலே அமர்த்திக் கொண்டு
துன்பம் வந்துவிட்டால் காத்திடவே வந்திடுவாள் உருமாறி
கார்மேக கூந்தல்காரி கைநிறைய வளையலோடு
ஊராளி முழுதும் சுற்றி வருவா குறத்தியாக
வேப்பிலையில் வாசம் செய்து வேதனைகள் தீர்த்திடுவா
வேதத்தின் கருபொருளே ஊராளி பத்ரகாளி
பக்தன் எனக்காக பராசக்தி நீயும்
முக்தி தர வந்து சித்தம் தனை தெரிய வைத்து
நிலையான வாசம் செய்யும் பத்ரகாளி
கிணறு நிரம்பியிருக்க ஒற்றை தீபம்
மட்டும் எரியும் மர்மமென்ன
களிறு முகமுடையவனை பெற்றவளே
விடை தருவாயா பத்ரகாளி
ஊராளி பத்ரகாளி வேங்கை ஏறும் பத்ரகாளி
சூலம் ஏந்தி சூரனை வதைந்த நீ
அன்பாக என்னை காத்திடம்மா

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

வாறாளே வாறாளே பத்ரகாளி
வாறாளே வாறாளே பத்ரகாளி
ஊராளி விளை வாழும் பத்ரகாளி
ஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
சக்தி சக்தி பராசக்தி
சக்தி சக்தி மஹாசக்தி
ஓம் சக்தி தாயே எந்தன் பராசக்தி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here