Type Here to Get Search Results !

கண்ணே நீயும் சொல்லு பாலூர் பத்ரேஸ்வரி... பாடல்

கண்ணே நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
அண்ணா நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
கண்ணின் மணியாக காத்திட வந்திடுவா

ஏற்றம் தந்திடுவா ஏகாந்த ரூபிணி
ஏழைகளின் குலதெய்வம் எங்கள் அன்னை பத்ரேஸ்வரி
எளிமையான தோற்றம் கொண்ட பத்ரேஸ்வரி
எம்பெருமானின் நாயகியே பத்ரேஸ்வரி

கண்ணே நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
அண்ணா நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
கண்ணின் மணியாக காத்திட வந்திடுவா

அழுகை சிரிப்பு எதுவானாலும் அணைத்திட
அம்மா என்றழைத்தால் உடனே வருவாய் காரணம் நான் உன்குழந்தை
கருமாரி நானும் கருவாக தாயின் கருவறையில்
மருந்தாகமாறி நீயும் காத்து கரும்பாக இனிக்க
நிச்சயமில்லா வாழ்விலே என்றும் நீயே உண்மை
இச்சையெல்லாம் தீர்ப்பதே உன் தன்மை

கண்ணே நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
அண்ணா நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
கண்ணின் மணியாக காத்திட வந்திடுவா

இதயத்தை காக்கிறேன் இமயத்தின் இமயமே
இருப்பது நீயே பூவின் மென்மையே
கயிலை அரசனின் சக்தியே
மயிலை திருமயிலை ஆளும் நாயகியே
அயலான் என்று எவருமில்லை
அம்மா தேவி பாலூர் பத்ரேஸ்வரி

கண்ணே நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
அண்ணா நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
கண்ணின் மணியாக காத்திட வந்திடுவா

பாலூர் பத்ரேஸ்வரி நீ எங்கள் பாக்கியம்
உனை வணங்கிட வந்திடும் சௌபாக்கியம்
பாக்கியவதி சௌபாக்கியவதி பாலூரின் புனிதவதி
காலங்கள் மாறி போகும் உந்தன் ரூபம் மாறாது
கோலங்கள் பல கண்டாலும் உந்தன் சாந்த குணம் மாறாது

கண்ணே நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
அண்ணா நீயும் சொல்லு பத்ரேஸ்வரி
கண்ணின் மணியாக காத்திட வந்திடுவா

ஏற்றம் தந்திடுவா ஏகாந்த ரூபிணி
ஏழைகளின் குலதெய்வம் எங்கள் அன்னை பத்ரேஸ்வரி
எளிமையான தோற்றம் கொண்ட பத்ரேஸ்வரி
எம்பெருமானின் நாயகியே பத்ரேஸ்வரி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.